நாளைய ராசி பலன்(11-12-2025)

Report

 மேஷம்:

ஒரு சிலருக்கு வங்கி தொடர்பான சில சிக்கல் வரலாம். வேலையில் உங்களுக்கு சில குழப்பமான சூழல் இருக்கும். எதிர்ப்பாராத இடங்களில் இருந்து கேட்ட உதவி கிடைக்கும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.

ரிஷபம்:

இன்று குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். நட்பு வட்டாரங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அரசியல் தொடர்பான விஷயங்களில் சற்று நிதானம் அவசியம்.

மிதுனம்:

திருமண தொடர்பான பேச்சுக்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். பெற்றோர்களை மீறி சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். வேலையில் உங்களுக்கு எதிராக சிலர் இயங்க வாய்ப்புகள் உள்ளது.

2025 வைகுண்ட ஏகாதசி எப்பொழுது? இந்த வழிபாடு செய்தால் சொர்க்கம் நிச்சயமாம்

2025 வைகுண்ட ஏகாதசி எப்பொழுது? இந்த வழிபாடு செய்தால் சொர்க்கம் நிச்சயமாம்

கடகம்:

கடன் தொடர்பாக சில சங்கடம் சந்திப்பீர்கள். முடிந்த அளவு வருமானத்தை சிக்கனம் செய்துக் கொள்ளுங்கள். தந்தை உடல் நிலையில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான நாள்.

சிம்மம்:

இன்று சாதுரியமாக பேசுவதால் மட்டுமே பிரச்சனையை தவிர்க்கலாம். உங்கள் வீடுகளில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கும் நாள். அத்தை வழி உறவால் சில மன கசப்புகள் வரலாம்.

கன்னி:

உங்கள் வீடுகளில் உங்கள் பேச்சுக்கு எதிர்ப்புகள் தெரிவிப்பார்கள். வேலை தொடர்பான விஷயங்களில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நன்மை அளிக்கும்.

துலாம்:

உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். மதியம் மேல் சிலர் மருத்துவரை சந்திக்க நேரலாம். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முழு ஆதரவு கிடைக்கும். இறைவழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:

சிலர் தேவை இல்லாத விஷயங்களுக்கு வீண் முயற்சி செய்வதை தவிர்த்து விடுவார்கள். உங்களுக்கு எதிராக இருந்தவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். நன்மையான நாள்.

நீங்கள் பிறந்த தேதி உங்கள் முற்பிறவியை பற்றி சொல்வது என்ன?

நீங்கள் பிறந்த தேதி உங்கள் முற்பிறவியை பற்றி சொல்வது என்ன?

தனுசு:

உங்களை சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தை அறிந்து கொண்டு செயல்படுவீர்கள். கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

மகரம்:

உங்களை பற்றி நீங்கள் மறு பரிசீலனை செய்வீர்கள். சிலருக்கு ஆன்மீக ரீதியாக சில குரு கிடைப்பார்கள். சொந்தங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நடக்கும் நாள். வேலை பளு குறையும்.

கும்பம்:

குடும்பத்தில் உள்ளவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். சிலர் முக்கிய திருவிழாக்களில் பங்கு கொள்வீர்கள். வருமானத்தை உயர்த்தும் பணிகளில் ஈடுபாடு செல்லும் நாள்.

மீனம்:

இன்று உறவினர்களின் உண்மை முகம் அறிந்து செயல்படும் நாள். ஆரோக்கியத்தில் முழு அக்கறை செலுத்த வேண்டும். அரசியல் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றமும் பாராட்டுகளும் கிடைக்கும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US