நாளைய ராசி பலன்(31-12-2025)
மேஷம்:
இன்று வீண் வம்பு வழக்குகளில் சிக்கி கொள்ளாதீர்கள். எதையும் பலமுறை யோசித்து பிறகு செயல்படுத்துங்கள். வண்டி வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் தேவை.
ரிஷபம்:
ஒரு சிலருக்கு எதிர்கால வாழ்க்கையை பற்றிய பயம் வரும். முன்னோர்கள் வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். தொழிலில் முழு ஈடுபாடு செலுத்துவீர்கள். நன்மையான நாள்.
மிதுனம்:
உங்கள் எதிரியால் சில தொந்தரவுகள் வரலாம். பணம் தொடர்பான விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகும். பெற்றோர்கள் உடல்நிலையில் நீங்கள் முழுமையான கவனம் செலுத்த வேண்டும்.
கடகம்:
வெளியூர் பயணம் செல்லும் பொழுது பொருட்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வேலையில் முன்னேற்றம் அடைவீர்கள்.
சிம்மம்:
குடும்பத்துடன் நீங்கள் வெளியூர் செல்ல நேரலாம். மதியம் மேல் நீங்கள் பொழுது போக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் மாலை மேல் வரலாம்.
கன்னி:
இன்று மனதில் தைரியம் பிறக்கும். எதையும் சமாளித்து கொள்ளலாம் என்று நீங்கள் முக்கிய முடிவு எடுப்பீர்கள். வருமானத்தில் சந்தித்த தடை எல்லாம் விலகி நன்மை உண்டாகும் நாள்.
துலாம்:
எதிர்பாராத உறவுகளின் அறிமுகத்தால் மனம் மகிழ்ச்சி அடையும். எதிர்கால தேவைக்கான புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவு கொடுப்பார்கள்.
விருச்சிகம்:
இன்று வாழ்க்கை துணையுடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். சிலருக்கு மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். பெற்றோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் நாள்.
தனுசு:
பிள்ளைகளுடன் நீங்கள் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள். சிலர் குடும்பத்துடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் நிலை வரலாம். எதிரிகள் விலகி செல்வார்கள்.
மகரம்:
வருமானத்தில் சந்தித்த சிக்கல் விலகும். வேலையில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். சகோதரன் சகோதரி வழி உறவால் சில சங்கடம் வரலாம். மாலை மேல் கவனம் தேவை.
கும்பம்:
வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். நட்பு வட்டாரம் விரிவடையும். சிலர் குலதெய்வ ஆலயங்களில் சென்று வழிபாடு செய்வீர்கள்.
மீனம்:
இன்று முக்கியமான முடிவு ஒன்று எடுக்கும் நாள். பிள்ளைகள் பற்றி தெரிந்து கொள்வீர்கள். உங்கள் குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |