நாளைய ராசி பலன் (23-03-2026)

Report

மேஷம்:

இன்று உங்களுக்கு மனதில் எதிர்காலம் பற்றிய குழப்பம் உண்டாகும். குழந்தைகள் மீது அக்கறை செலுத்த வேண்டும். வேலை பளு குறையும். நண்பர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.

ரிஷபம்:

வாழ்க்கை துணை உங்களுக்கு முழு ஆதரவு கொடுப்பார்கள். அரசியல் ரீதியாக புதிய நட்புகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டிய நாள்.

மிதுனம்:

மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வியாபார தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். மன அழுத்தம் குறையும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சனை விலகும்.

கடகம்:

தேவை இல்லாமல் உணர்ச்சிவசப் படாதீர்கள். உங்கள் தந்தை உடல் நிலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக நீங்கள் அதிக உழைப்புகள் கொடுப்பீர்கள்.

வாஸ்து: வடக்கு திசையில் என்ன பொருட்கள் வைக்கலாம்? வைக்கக்கூடாது?

வாஸ்து: வடக்கு திசையில் என்ன பொருட்கள் வைக்கலாம்? வைக்கக்கூடாது?

 

சிம்மம்:

கலைத்துறையில் நீங்கள் மிக பெரிய அளவில் சாதிப்பீர்கள். காதல் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்புகள் விலகும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள்.

கன்னி:

இன்று உடன் பிறந்தவர்களிடம் தேவையில்லாத வாதம் செய்யாதீர்கள். உறவினர்களிடையே ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். ஒரு சிலர் ஆடம்பர செலவுகளை செய்வீர்கள்.

துலாம்:

இன்று உடல் ஆரோக்கியத்தை சற்று கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்துடன் தொலைதூர பயணம் மேற்கொள்ளலாம். வருமானத்தை உயர்த்துவதற்கான வழியில் ஈடுபடுவீர்கள்.

விருச்சிகம்:

உங்களுக்கு தேவை இல்லாமல் தொந்தரவு கொடுத்தவர்கள் விலகிச் செல்வார்கள். சொந்தங்கள் மத்தியில் உங்களுடைய மதிப்பு உயரும் நாள். வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும்.

ஜோதிடத்தில் செவ்வாய் சனி சேர்க்கை தோஷமா? அதிர்ஷ்டமா?

ஜோதிடத்தில் செவ்வாய் சனி சேர்க்கை தோஷமா? அதிர்ஷ்டமா?

தனுசு:

இன்று பிள்ளைகளால் நீங்கள் பெருமை அடைவீர்கள். தாய்வழி உறவுகளை ஏற்பட்ட விரிசல் விலகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள்.

மகரம்:

இன்று தொழிலில் மிகவும் கடுமையான உழைப்பை போடுவீர்கள். உங்களுக்கு எதிராக சென்றவர்கள் விலகிச் செல்வார்கள். உங்களை சுற்றி உள்ளவர்களின் உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள்.

கும்பம்:

இன்று நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். வியாபாரம் தொடர்பாக வெளியூர் செல்ல நேரலாம். நன்மையான நாள்.

மீனம்:

இன்று நீங்கள் வழக்கு தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை செய்து கொள்வீர்கள். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US