நாளைய ராசி பலன்(27-06-2025)
மேஷம்:
இன்று உங்களுக்கு நினைத்த இடத்தில் இருந்து உதவிகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் அடையும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
ரிஷபம்:
இன்று எதிர்காலம் பற்றிய கவலை விலகும். கணவன் மனைவி இடையே உறவு பலப்படும். விலகி சென்றவர்கள் உங்களை தேடி வருவார்கள். மிகவும் சிறந்த நாளாக அமையப்போகிறது.
மிதுனம்:
மனதில் உள்ள குழப்பங்கள் விலகும். விளையாட்டாக செய்த விஷயம் ஒன்று விபரீதத்தில் முடிய வாய்ப்புகள் உள்ளதால் கவனம் அவசியம். உண்மை நிலை அறிந்து செயல்படுவீர்கள்.
கடகம்:
இன்று மனதில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். மதியம் மேல் நினைத்த காரியங்கள் கைக்கூடி வரும். இறைவழிபாடு நன்மை தரும். நண்பர்கள் வட்டத்தில் பலரின் உண்மை முகம் அறிவீர்கள்.
சிம்மம்:
வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் இல்லையென்றாலும் வருமான தடை இருக்காது. தாய் வழி உறவால் உங்களுக்கு நன்மை உண்டாகும். உடல் உபாதைகள் சரி ஆகும்.
கன்னி:
குலதெய்வம் வழிபாடு உங்களுக்கு சிறந்த பலன் கொடுக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். நினைத்த வேலையில் சில தடைகள் உண்டாகும்.
துலாம்:
மனதில் தெளிவும் உற்ச்சாகமும் பிறக்கும். பிரிந்த சென்ற உறவுகள் உங்களை மீண்டும் தேடி வருவார்கள். எதிரிகள் உங்களை விட்டு செல்வார்கள். மனக்கவலைகள் விலகி சந்தோசம் உண்டாகும்.
விருச்சிகம்:
வாழ்க்கையில் நீங்கள் மறக்கவே முடியாத சில சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. காதல் வாழ்க்கை சிறப்பாக அமையும். முன்னோர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.
தனுசு :
இன்று பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். இறைவழிபாட்டில் மனம் செல்லும். உடல் ஆரோக்கியம் சிறந்த முன்னேற்றம் பெரும். உங்களுக்காக உதவி செய்ய உறவினர்கள் முன் வருவார்கள்.
மகரம்:
இன்று உங்கள் கண்களில் சில பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. பாதியில் நின்ற வேலையை மீண்டும் எடுத்து செய்வீர்கள். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகி செல்லும்.
கும்பம்:
திருமண வாழ்க்கையில் உள்ள சிக்லகள் விலகும். வேலை தொடர்பாக வாக்கு வாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் கவனம் அவசியம்.
மீனம்:
நீண்ட வருடமாக உங்கள் மனதில் இருந்த கவலைகள் விலகும். உங்களை எதிர்த்தவர்கள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். பலரின் உண்மை முகத்தை அறிவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |