இன்றைய ராசி பலன்(10.10.2024)

Report

மேஷம்

எந்தவொரு செயலிலும் உங்களுடைய நேரடிப் பார்வை அவசியம்.வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும்.வருமானம் அதிகரிக்கும்.உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

ரிஷபம்

நிலம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நிதானம் அவசியம். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.வேலைபளு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பிரச்னைகளை சந்திப்பீர்.

மிதுனம்

வியாபாரத்தில் போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் விலகும். புதிய வாடிக்கையாளரால் வருவாய் அதிகரிக்கும்.கூட்டுத் தொழிலில் இருந்த சிக்கல் விலகும்.

கடகம்

நீண்ட நாள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைப்பதை நடத்தி காட்டுவீர்கள்.புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்

பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செயல்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.உங்கள் நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும்.

கன்னி

வாங்கிய கடன்களை அடைப்பீர். அரசு வழி முயற்சியில் தடை விலகும்.அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நேற்றைய விருப்பம் நிறைவேறும்.

நவராத்திரி முடியும் முன் நாம் கட்டாயம் செய்யவேண்டியவை

நவராத்திரி முடியும் முன் நாம் கட்டாயம் செய்யவேண்டியவை


துலாம்

கவனமாக செயல்பட்டு,வேலைகளை முடிப்பீர்.எதிர்ப்புகள் விலகும்.எதிர்பார்த்த பணம் வரும். சிறு வியாபாரிகள் முயற்சி வெற்றியாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.

விருச்சிகம்

சூழ்நிலையை அறிந்து செயல்படுவீர்கள்.வியாபாரத்தை விரிவு செய்வதில் கவனம் தேவை. செல்வாக்கு உயரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.

தனுசு

வருமானத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் விருப்பம் பூர்த்தியாகும்.

மகரம்

எதிர்பார்த்த வரவு இழுபறியாகும். அலைச்சலால் சோர்வு அடைவீர்.உழைப்பு அதிகரிக்கும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. செலவிற்கேற்ற வரவு வரும்.

கும்பம்

பணியாளர்கள் ஒத்துழைப்பால் வருமானம் அதிகரிக்கும்.முயற்சியில் இருந்த தடை விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல் நீங்கும். வரவேண்டிய பணம் வரும். செல்வாக்கு உயரும்.

மீனம்

அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். மேலதிகாரி ஆதரவால் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த தகவல் வரும்.ஒரு சிலருக்கு புதிய வேலையால் அதிர்ஷ்டம் உருவாகும்.     

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

  

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US