இன்றைய ராசி பலன்(29-04-2025)
மேஷம்:
இன்று பணியில் உங்களுக்கு ஆதரவாக சிலர் செயல்படுவார்கள். நேற்று வரை சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் விலகி செல்லும் . குடும்பத்தில் உண்டான கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி செல்லும்.
ரிஷபம்:
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தைகள் நடக்கும். சகோதர உறவுகளிடம் கவனமாக இருக்க வேண்டும். உடல் சோர்வு உண்டாகும். உணவு பழக்கவழக்கத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்:
உங்கள் செயலில் நீங்கள் எதிர்பார்த்த பலன் இல்லாமல் போகலம். தேவை இல்லாத வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். வேலை தொடர்பான விஷயங்களில் பெரும் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
கடகம்:
உங்கள் பணியில் இன்று சிறந்து விளங்குவீர்கள். எதையும் தீர ஆலோசித்து செயல்பட்டால் நன்மைகள் கிடைக்கும். உங்களை தொந்தரவு செய்த எதிரிகள் உங்களை விட்டு விலகி செல்வார்கள்.
சிம்மம்:
திட்டமிட்டு செயல்படுவீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செயல்களில் லாபம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். உடல்நிலையில் கவனம் தேவை.
கன்னி:
உங்கள் மனதில் உள்ள எதிர்பார்ப்புகள் உங்களை விலகி செல்லும். குடும்பத்தில் உண்டான சண்டைகள் விலகி நிம்மதி உண்டாகும். தொழில் செய்யும் இடங்களில் உங்களுக்கான எதிர்ப்புகளை சந்திப்பீர்கள்.
துலாம்:
சந்திராஷ்டமம் என்பதால் மனதில் சில குழப்பமும் கோபமும் உண்டாகும். நீண்ட நாட்களாக கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் நல்ல தீர்வை பெறுவீர்கள். இயந்திரப் பணியில் கவனமாக இருக்க வேண்டும்.
விருச்சிகம்:
உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். வருமானம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். செயல்களில் லாபம் தோன்றும்.
தனுசு:
குடும்பத்தில் சிறு சிறு குழப்பம் உண்டாகலாம். மனதில் சில குழப்பங்கள் தோன்றி மறையும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உடல் நிலையில் உண்டான தொந்தரவுகள் மறையும்.
மகரம்:
திட்டமிட்டு செயல்படுவது அவசியம். வெளியூர் பயணத்தை ஒத்தி வைப்பது நல்லது. செய்துவரும் தொழிலில் போட்டியாளரால் சங்கடம் தோன்றும். பணவரவில் தடை உண்டாகும். உதவி புரிவதாக சொன்னவர் விலகுவர்.
கும்பம்:
தாய்வழி உறவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர். வெளியூர் பயணத்தில் சிறு சங்கடம் உண்டாகும். கவனமாக செயல்படுவது நல்லது. உங்கள் செயல்பாட்டினால் வருமானத்தில் தடை உண்டாகும்.
மீனம்:
மனதில் பெரிய குழப்பங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக சந்தித்த பிரச்சனைகளுக்கு நல்ல முடிவை பெறுவீர்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட பலரின் ஆலோசனையை பெறுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |