இன்றைய ராசி பலன்(24-06-2025)

Report

 மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் கொஞ்சம் சுமாரான நாளாகத்தான் இருக்கும். இன்று வேலையில் உங்கள் பொறுப்புகளை பிறரை நம்பி கொடுக்காதீர்கள். பணம் செலவு செய்வதில் கவனம் தேவை.

ரிஷபம்:

குடும்ப விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். இன்று யாரை நம்பியும் பணத்தை கொடுக்க வேண்டாம். மனதில் வீண் பயமும் பதட்டமும் உண்டாகும். கவனம் தேவை.

மிதுனம்:

இன்று சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களை பெறுவீர்கள். குடும்பம் தொடர்பான விஷயங்களில் ஏற்பட்ட விரிசல் சரி ஆகும்.

கடகம்:

இன்று நீங்கள் துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். பண பரிமாற்றத்தில் கவனமாக இருக்கவும். ஏமாற்றங்களிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள். இறைவழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:

இன்று மனதில் நம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள். வியாபாரத்தில் சந்தித்த நஷ்டத்தை சரி செய்வீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது நன்மை தரும்.

கன்னி:

அரசு துறையில் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. மாலையில் திடீரென லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கூட்டுத் தொழிலில் பண பரிமாற்றத்தை வெளிப்படையாக வைத்திருக்கவும்.

துலாம்:

இன்று மாணவர்களுக்கு மிக சிறப்பான நாள். அலுவலகத்தில் உங்கள் நட்பு வட்டாரம் விரிவடையும். உங்கள் பேச்சுக்கு சொந்தங்கள் மரியாதை கொடுப்பார்கள். வாழ்க்கை துணை உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

மரணமே நெருங்கினாலும் இதை மட்டும் செய்யாதீர்கள்

மரணமே நெருங்கினாலும் இதை மட்டும் செய்யாதீர்கள்

 

விருச்சிகம்:

பெரிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பு நிபுணர்களிடம் ஆலோசனை கேட்கவும். அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் உங்கள் திறமை பாராட்டப்படும்.

தனுசு:

இன்று நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்படும். இன்று தேவை இல்லாத நபர்களை நம்பி சில வாக்குவாதங்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மகரம்:

நீண்ட நாட்களாக சம்பள உயர்வு எதிர்பார்ப்பவர்களுக்கு நினைத்த சம்பளம் கிடைக்கும். குடும்ப உறுப்பினருக்கு உடலில் சிக்கல் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.

கும்பம்:

சொத்து தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனம் அவசியம். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். சிலருக்கு வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.

மீனம்:

இன்று அரசு அலுவலருக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். ஆன்லைன் சம்பந்தப்பட்ட வேலைகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்றுக்கொடுக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

     

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US