ஏன் இறைவழிபாடு அவசியம் ?
இறைவன் அவன் தான் எல்லாமும்.அவனின்றி அணுவும் அசையாது அப்படியாக ஒருவர் ஏன் இறைவனை வணங்க வேண்டும்?அதாவது சுழலும் உலகத்தில் உண்மை நிலை அறிந்து செயல் பட அவன் கால்கள் பற்றிக்கொண்டு சரணடையவேண்டியது அவசியம் ஆகிறது.
அவன் கால்களை பற்றி கொள்வதில் எத்தனை பேரானந்தம் என்பது அனுபவித்தால் தான் தெரியும். அவன் நம்முள் வர பொன் பொருள் புகழ் பணம் எல்லாம் ஒன்றும் இல்லாமல் பற்றற்று போகும்.ஒரே பற்றாக இறைவன் அவன் மட்டுமே இருப்பான்.
இந்த உலகத்தில் நிறைய துன்பங்களே ஆசை கொள்வதால் வருவதே.அப்படி எந்த ஒரு ஆசையும் இல்லாமல் இறைவன் அவன் மீது மட்டும் ஆசை கொண்டால் எப்படி இருக்கும்.அன்பும் பக்தியும் மனதில் நிரம்பி கிடக்கும்.
எத்தனை துயர் வந்தாலும் மனம் கலங்காது அவன் பார்த்துக்கொள்வான் என்று நம்பிக்கை பிறக்கும்.
இறைவனை வழிபட தொடங்கிவிட்டால் புறம் பேசுவது தீய பழக்கம் குணங்கள் எல்லாம் தெரியமால் மறைந்து விடும்.சங்கீத ஸ்வரங்கள் போல் வாழ்க்கை பக்தியில் அவனை ரசித்து கொண்டு இருக்கும்.
மனம் ஒரு நிலைப்படும்.துயரம் என்ற ஒன்று உலகத்தில் இல்லை. எல்லா மன நிலைகளும் கால மாற்றங்களும் மாயை என உணருவோம்.
இந்த உணருதலுக்கே வாழ்க்கை அத்தனை அழகாய் மாறும்.ஆதலால் தன் குடும்பம் பிள்ளைகள் என்று இல்லாமல் வேறு பாடு பாகுபாடு கொள்ளாமல் இறைவன் அவன் பிள்ளைகள் நாம் உணர்ந்து நொடி பொழுது ஓடும் அதில் விதி மாறும் என்று புரிந்து வாழ்ந்தால் வாழ்க்கையில் துன்பம் இல்லை இன்பமே.
அவனை சரண் அடைவோம் அவன் கருணையில் மூழ்கி அவன் அருள் பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |