ஐப்பசி மாதம் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகள்

By Sakthi Raj Oct 18, 2024 10:00 AM GMT
Report

புரட்டாசி முடிந்து ஐப்பசி மாதம் தொடங்கிவிட்டது.அப்படியாக புரட்டாசி மாதம் போல் ஐப்பசி மாதத்திலும் நிறைய சிறப்புகள் இருக்கிறது.இப்பொழுது ஐப்பசி மாதத்தில் வரும் முக்கியமான விஷேசங்கள் மற்றும் பண்டிகைகள் பற்றி பார்ப்போம்.

ஐப்பசி பௌர்ணமி 

சிவபெருமானுக்கு அன்னா அபிஷேகம் பற்றி கேள்வி பட்டு இருப்போம்.அந்த சிறப்பான அன்னா அபிஷேகம் இந்த ஐப்பசி மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது.அதவாது சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறும்.

கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.நாம் உண்ணும் உணவிற்கு சிவபெருமானுக்கு நன்றி சொல்லும் விதமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது.

ஐப்பசி மாதம் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகள் | Iypaasi Month Festival Celebration 

எல்லா சிவன் கோயில்களிலும் இந்த பூஜை சிறப்பாக நடைபெற்றாலும் தமிழகத்திற்கே பெருமை சேர்த்து கொடுத்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் மிக சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் இருந்து கலந்து கொள்ள பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர்.

ஐப்பசி சதயம் 

தமிழகத்தில் மிகவும் பிரமிப்பூட்டும் வகையில் அமைய பெற்ற தஞ்சை கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று அரசு சார்பில் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வளர்பிறை ஏகாதசி 

ஐப்பசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி 'பாபாங்குசா" என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் வறுமை விலகி.பாவங்கள் கழிந்து புண்ணியம் கிடைக்கிறது.

தேய்பிறை ஏகாதசி : ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி 'இந்திரா ஏகாதசி" என்று அழைக்கப்படுகிறது.இந்திரா ஏகாதசியில் விரதமிருந்தால் நாம் செய்த பாவம் மட்டுமின்றி நம் முன்னோர்களின் பாவங்களும் நீங்கும்.

அனைத்து பிரச்சனைகள் தீர இந்த ஒரு எளிய பரிகாரம் போதும்

அனைத்து பிரச்சனைகள் தீர இந்த ஒரு எளிய பரிகாரம் போதும்


கடைமுகம் 

ஐப்பசி மாத கடைசி நாள் கடைமுகம் என்று அழைக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் அனைத்துப் புண்ணிய நதிகளும் கலந்து புனிதத்தை அள்ளி வழங்கும் என்பர்.மற்ற மாதங்களை காட்டிலும் இந்த மாதத்தில், காவிரி நீராடல் புண்ணியம் மிகுந்தது. அதுவும், ஐப்பசி கடைசி நாளன்று மேற்கொள்ளப்படும் புனித நீராடலை கடை முழுக்கு என்பர். ஐப்பசி மாதம் கடைசி நாளில் காவிரியில் முழுகி, மயூரநாதரை வழிபட்டால் நன்மை உண்டாகும். மேலும் நம் பாவங்கள் கரைந்தோடும்.

ஐப்பசி மாதம் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகள் | Iypaasi Month Festival Celebration

தீபாவளி 

அனைவரும் மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் பண்டிகை தீபாவளி.அது ஐப்பசி மாதத்தில் தான் வருகிறது.ஐப்பசி மாதம், தேய்பிறை (கிருஷ்ணபட்ச) சதுர்த்தசி திதியில் தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது.

கந்த சஷ்டி 

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US