உங்கள் ஜாதகத்தில் இருக்கும் கர்மா நீங்களே கண்டுபிடிக்கலாம்!

By GD Rameshkumar Jul 22, 2024 08:30 AM GMT
Report

உங்கள் ஜாதகப்படி உங்களின் முன் ஜென்ம கர்மா என்ன? அதை யாரிடம் கேட்பது? எப்படி சரி செய்வது? அதற்கு பரிகாரங்கள் உண்டா? இதுபோன்ற கேள்விகள் ஏராளம் இருக்கும்.

ஆனால் இவற்றிற்கு பதில் உண்டா? என்று ஆராய்கையில் மிக எளிமையாக எல்லோரும் புரிந்து கொள்ளும்படி தெளிவாக பதில் சொல்கிறார் பிரபல ஜோதிடர் மோனிகா.

இந்த காணொளியை காணும்பொழுது உங்கள் சுயஜாதகத்தை கையில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் அதில் "ல" என்று குறிப்பிட்டுள்ள இடம் தான் உங்கள் லக்கினம் , லக்கினத்தை ஒன்றாம் இடமாக பாவித்து அடுத்ததடுத்த கட்டங்களை வலப்புறமாக கணக்கிட்டுக் கொள்ளுங்கள் கால புருஷ தத்துவப்படி மேஷ லக்கினத்தில் இருந்து யார் ஒருத்தர் 2ம் இடம் 5ம் இடம் , மற்றும் 8 , 11ம் இடங்களில் லக்கினம் எடுத்து பிறப்பெடுக்கிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் போன ஜென்ம கர்மாவோடுதான் வந்திருக்கிறார்கள் என்பதை எளிமையாக கண்டுபிடித்துவிடலாம்

கோயிலுக்கு சென்றால் யார் பெயரில் அர்ச்சனை செய்யவேண்டும்?

கோயிலுக்கு சென்றால் யார் பெயரில் அர்ச்சனை செய்யவேண்டும்?


சிலர் சாதாரணமாகவே "போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ தெரியல இந்த ஜென்மத்தில் இவ்வளவு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன்" என்று சாதாரணமாக புலம்புவதை கூட நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

நிச்சயம் அவர்கள் சொல்வது உண்மைதான் அப்படி எடுத்த இந்த பிறவியில் என்னென்ன நிறைகுறைகளை பெறப்போகிறோம் என்பதை மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து லக்கினத்திற்கும் நிகழ்காலம் எப்படி இருக்கும் என்பதையும் செய்ய வேண்டிய ஆன்மிக பரிகாரங்கள் , வாழ்வியல் பரிகாரங்கள் என அனைத்தையும் தெளிவாக விளக்கியுள்ளார், மொபைலை ஆஃப் பண்ணி வைப்பது, பேங்க் அக்கவுண்டை மாற்றுவது, போன்ற சின்ன சின்ன விசயங்களை பின்பற்றினால் கூட வாழ்க்கையில் வெற்றியடைய முடியும் என்று நம்பிக்கையூட்டுகிறார்

மேலும் தெரிந்துகொள்ள இணைக்கப்பட்டுள்ள காணொளியைக் காணுங்கள்



ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

 

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US