2026 இன்னும் 3 நாளில் சூரியன் பெயர்ச்சி.. 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப் போகிறது?

By Sakthi Raj Jun 13, 2026 10:39 AM GMT
Report

கிரகளின் அரசனாக இருக்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் தான் ஒரு மனிதனின் நம்பிக்கை, அதிகாரம் புகழ் ஆகியவற்றிக்கு காரணியாக இருக்கிறார். ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் பொழுதும் சூரிய பகவான் அவருடைய ராசிக்கு மாற்றுகிறார்.

ஜூன் 15ஆம் தேதி அவர் மிதுன ராசியில் பெயர்ச்சியாகிறார். மிதுன ராசி ஒரு காற்றின் ராசி என்பதால் சூரிய பகவானுடைய இந்த பெயர்ச்சியானது 12 ராசிகளுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை பற்றி பார்ப்போம்.

2026 இன்னும் 3 நாளில் சூரியன் பெயர்ச்சி.. 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப் போகிறது? | June 15 Suriyan Peyarchi Prediction For 12 Zodiac

வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் விலக யார் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்?

வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் விலக யார் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்?

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் நல்ல வேலை வாய்ப்பு தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய பயணங்கள் வழியாக முன்னேற்றம் பெறுவீர்கள்.

ரிஷபம்:

இந்த காலகட்டங்களில் இவர்கள் பொருளாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். தனிப்பட்ட திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். ஆடம்பர செலவுகள் செய்யும்பொழுது கவனம் அவசியம்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிகவும் சாதகமான பலன்களை கொடுக்கப்போகிறது. உங்களுடைய இலக்குகளை நீங்கள் நினைத்தது போல் அடைந்து விடுவீர்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் குழந்தைகளால் நன்மை உண்டாகும். எதிர்கால திட்டங்களை திட்டமிட்டு செய்வீர்கள். உங்களுக்கு தேவையான விஷயங்களை நீங்கள் பூர்த்தி செய்யக்கூடிய காலகட்டம்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு நட்புகள் ரீதியாக ஒரு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப்போகிறது. சமுதாயத்தில் நற்பெயரை பெறுவீர்கள். பிறரை நம்பி செயல்படும் பொழுது கவனம் வேண்டும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் உடல் ஆரோக்கியத்தை நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. குழந்தைகளால் பெருமை உண்டாகும். திருமணம் கைகூடும்.

நீங்கள் மீன ராசியில் பிறந்த ஆண்களா? உங்களின் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்

நீங்கள் மீன ராசியில் பிறந்த ஆண்களா? உங்களின் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமாம்

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் உயர்கல்வி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். புதிய வாய்ப்புகள் வேலையில் உங்களுக்கு தேடி வரும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் அவர்கள் பேச்சு வார்த்தைகளில் மிகவும் கவனம் செலுத்தக் கூடியதாக இருக்கிறது. குடும்பத்தில் ரகசியமான விஷயங்களை மறைப்பதை தவிர்க்க வேண்டும்.

 தனுசு:

இந்த காலகட்டம் இவர்களுக்கு குடும்பத்தில் ஒரு நல்ல புரிதலை உண்டு செய்யும். மனதில் தேவையற்ற எண்ணங்கள் விலகி நன்மை உண்டாகும். கலைத்துறையில் சாதனை செய்வீர்கள்.

மகரம்:

இந்த காலகட்டம் இவர்களுடைய செயல்பாடுகளில் மிகவும் கவனத்தை செலுத்தக் கூடியதாக இருக்கிறது. தேவையில்லாத பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு பணி சுமையை அதிகரிக்காதீர்கள்.

கும்பம்:

இந்த காலகட்டங்களில் படைப்பாற்றல் மற்றும் வேலையில் சிறப்பாக விளங்குவீர்கள். உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள். கவனச் சிதறல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

மீனம்:

குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். எவ்வளவு பெரிய விஷயங்கள் ஆக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை பிறக்கும். மகிழ்ச்சி உண்டாகும்.    

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US