காளிக்கு பலி கொடுத்து நள்ளிரவு நடக்கும் வினோத பூஜை
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் என்னும் ஊரில் அமைந்திருக்கிறது முத்தாரம்மன் கோவில். இங்கு ஒவ்வொரு வருடமும் தசரா திருவிழா மிக விமர்சையாகவும் கொண்டாட்டமாகவும் நடைபெறும். மேலும் தசரா திருவிழா என்பது 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறக்கூடிய ஒரு முக்கிய விழாவாகும்.
இதில் முற்பகுதி வழிபாடாக காளி பூஜை நடைபெறுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. இந்த காளிவழிபாட்டில் பல்வேறு ஊர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வகலந்து கொள்வார்கள். இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஒன்றிணைந்து காளி பூஜையை நடத்தினார்கள்.
அதில் மாலை அணிந்த சாமிகளுக்கு அருள் ஏற்பட்டு பின்னர் அவர்கள் வேட்டைக்கு செல்வது பாரம்பரியமாக இடம் பெற்று வருகிறது. அதாவது வேட்டைக்கு செல்லும் பொழுது ஒவ்வொரு முச்சந்தியிலும் வைக்கப்பட்டிருக்கும் தடியங்காயை அருவாளால் வெட்டுவதும் பலியிடுவதும் சடங்காக கருதப்படுகிறது.

நவராத்திரி: துர்கா தேவிக்கு மிகவும் பிடித்த 5 ராசிகள்- அதிர்ஷ்டம் எப்பொழுதும் இவர்களுக்கு இருக்குமாம்
அதனைத் தொடர்ந்து ஒன்பது நாட்கள் குடிலில் அமர்ந்து தவம் செய்யும் காளியை அழைக்கும் நிகழ்வு நடைபெற்றது. மகிஷாசுரனை வதம் செய்த நிகழ்வை விஜய் தசமியாக நாம் கொண்டாடுகின்றோம், மேலும் அன்றைய காலங்களில் போருக்கு செல்லும் பொழுதும் பலரும் தவறாமல் காளியை வழிபாடு செய்து வெற்றிக்காக பூஜை செய்வது வழக்கம்.
அதேபோல் இன்றளவும் இந்த காளி பூஜை நடக்கிறது. இவ்வாறு நேற்று காளி பூஜை உடன் தொடங்கிய குலசேகரப்பட்டினம் தசரா இன்றளவும் நம்முடைய பக்தியையும் பாரம்பரியத்தையும் போற்றி பின்பற்றி வரக்கூடியதாக அமைந்திருப்பது சிறப்பு வாய்ப்பாக இருக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







