கடன் பிரச்சனையை தீர்க்க உதவும் சிவன் வழிபாடு
கடன் பிரச்சனை என்பது சிலருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை. சிலரை கடனை அடைப்பதற்காக கடுமையாக முயற்சி செய்வார்கள்.
ஆனால் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் கடனை அடைக்க முடியாமல், கடன் பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருப்பார்கள்.
இப்படிப்பட்டவர்கள் சிவன் வழிபாடு செய்வதன் மூலம் கடன் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
கடன் தீர சிவன் வழிபாடு
திங்கட்கிழமை அன்று சிவபெருமானை வழிபடுவதால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும்.
அதிலும் குறிப்பாக இந்த இலையை வைத்து வழிபடும் பொழுது நமக்கு ஏற்படக்கூடிய பலன் இரட்டிப்பாக இருக்கும்.
முதலில் ஊமத்தம் இலையை 108 என்ற எண்ணிக்கையில் பறித்து மஞ்சள் கலந்த தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
திங்கட்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு வெளிப்பிரதட்சணம் செய்யும் இடத்தில் சிவபெருமான் லிங்க ரூபத்தில் இருப்பார்.
அந்த லிங்கத்தில் ஏதாவது ஒரு லிங்கத்தை தேர்வு செய்து அந்த லிங்கத்திற்கு இந்த இலைகளை பயன்படுத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.
இப்படி வழிபாடு செய்து முடித்த பிறகு சுத்தமான தண்ணீர் மற்றும் பசும்பால் ஊற்றி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
மந்திரம்: ஓம் ருண முக்தேஷ்வர மகாதேவாய நமோ நமஹ
இவ்வாறு தொடர்ந்து 11 வாரங்கள் சிவபெருமானுக்கு ஊமத்தை இலையை வைத்து 108 முறை இந்த மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்ய கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.
11 வது வாரம் ஐயரை அழைத்து சிவலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகளை செய்து ஏதாவது பொருளை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
அந்த பொருட்களை ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |