பூசணிக்காய் உடைப்பதின் பின்னணி காரணம்

By Sakthi Raj Apr 30, 2024 02:00 PM GMT
Report

திருஷ்டி கழிப்பது என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது பூசணிக்காய் தான்.அது பெரிதாகவும் எளிதில் உடைய கூடிய காய் அதனால் திருஷ்டி சுற்றி போட  பயன் படுத்துகின்றோம் என்று நினைக்கின்றனர்.

அந்த பூசணி காய் உடைப்பதற்கான பின்னால் கதை ஒன்று இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.

உலகையே இருள் ஆக்கி அட்டகாசம் செய்தான் அந்தகாசுரன் என்னும் அரக்கன். அவனை அழிக்க காலபைரவர் ஆக அவதாரம் எடுத்தார் சிவபெருமான்.

பூசணிக்காய் உடைப்பதின் பின்னணி காரணம் | Kalabairavar Sivan Boomipoojai Thristi Poojai

காலபைரவரிடமிருந்து எட்டு திக்கும் அஷ்ட பைரவர்கள் தோன்றினார்கள் அவர்களிடமிருந்து 64 பைரவர்கள் தோன்றி அசுரனை அளித்தனர்.

அந்தகாசுரன் உயிர் பிரியும் போது பசியால் துடித்தான். அப்போது பைரவர் அங்கு விளைந்திருந்த பூசணிக்காயை பறித்து உன்ன கொடுத்தார்.

ஜாதகத்தில் நண்பரால் யாருக்கு யோகம் உண்டு?

ஜாதகத்தில் நண்பரால் யாருக்கு யோகம் உண்டு?


பின் அவன் பைரவரிடம் மக்கள் வீடுகளில் நடத்தும் எந்த ஒரு பூஜை நற்செயல்களில் தனக்கு கவுரவம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டான்.

அதன்படியே விசேஷ வீடுகளில் அந்தகாசுரன் மகிழ்ச்சி படுத்தும் விதமாக திருஷ்டிக்காக பூசணிக்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

பூசணிக்காய் உடைப்பதின் பின்னணி காரணம் | Kalabairavar Sivan Boomipoojai Thristi Poojai

மேலும் அந்தகாசுரனை அழித்த பொழுது அவனிடம் இருந்து வெளியேறிய ரத்தத்தை குடிக்க பூதம் ஒன்றை தோற்றுவித்தார் பைரவர்.

தனக்கும் உலகில் மதிப்பு கிடைக்க வேண்டும் என பூதம் கேட்டுக்கொண்டதால் அதை வாஸ்து புருஷன் ஆக்கினார் பைரவர்.நாம் புது வீடு கட்ட பூமி பூஜை நடத்தும் பொழுது இவருக்கே பூஜை நடத்துகின்றோம்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US