கடுமையான பொருளாதார நெருக்கடிகளை நீக்கும் முருகப்பெருமானின் கந்தர் அநுபூதி

By Sakthi Raj Sep 19, 2026 07:38 AM GMT
Report

அருணகிரிநாதர் அருளிய இந்த கந்தர் அனுபூதி நம் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய ஒவ்வொரு துயரங்களையும் போக்கக்க்கூடியதாக இருக்கிறது. அதிலும், கடுமையான பொருளாதார நெருக்கடிகள் வறுமையை நீக்குவதற்கு அவர் ஒரு பாடலை பாடியிருக்கிறார், அதை நாம் பாடுகின்ற பொழுது நிச்சயம் அந்த வறுமை நீங்குகிறது.

கடுமையான பொருளாதார நெருக்கடிகளை நீக்கும் முருகப்பெருமானின் கந்தர் அநுபூதி | Kandar Anubhoothi To Overcome Financial Struggles

வீடுகளில் தரித்திரம் ஏற்படாமல் இருப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய சில முறைகள்

வீடுகளில் தரித்திரம் ஏற்படாமல் இருப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய சில முறைகள்

கந்தர் அநுபூதி – பாடல் 19:

“வடிவும் தனமும் மனமும் குணமும்,
குடியும் குலமும் குடிபோ கியவா,
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே,
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.”

இந்த ஒரு பாடலில் அருணகிரிநாதர் வறுமையினுடைய கொடுமையை மிக அழகாக வெளிப்படுத்தி இருப்பார். இங்கு வறுமை என்பது வெறும் கையில் பணம் இல்லாத நிலை மட்டுமல்ல.

அது ஒருவருடைய தோற்றம், மனநிலை, நற்குணம் சமூக அந்தஸ்து மரியாதை வாழ்க்கையில் நிம்மதி என பல விஷயங்களை பாதிக்க கூடிய ஒரு துயரமான சூழ்நிலையை அவர் அனுபவத்தின் வழியாக நமக்கு எடுத்துரைக்கிறார்.

அதனால் தான் "மிடி' என்ற ஒரு பாவி வெளிப்பட்டதாக அவர் கூறுகிறார். அதாவது, வறுமையை மிகப்பெரிய கொடிய சக்தியாக காட்டி அது மனிதனை எவ்வாறு பலவீனப்படுத்துகிறது என்பதை இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது.

கடுமையான பொருளாதார நெருக்கடிகளை நீக்கும் முருகப்பெருமானின் கந்தர் அநுபூதி | Kandar Anubhoothi To Overcome Financial Struggles

2026: கன்னியில் சூரியன்: புரட்டாசி மாதத்தில் பண மழையில் நனைய போகும் ராசிகள் யார்?

2026: கன்னியில் சூரியன்: புரட்டாசி மாதத்தில் பண மழையில் நனைய போகும் ராசிகள் யார்?

அருணகிரிநாதர் நல்ல குடியிலும் குளத்திலும் பிறந்தவர். நல்ல குணங்களுடன் வாழக்கூடிய நிலை அவரை சூழ்ந்து இருந்தது.

ஆனால், வாழ்க்கையில் ஏற்பட்ட தவறான பழக்க வழக்கங்களும், ஆசைகளும் வழி தவறிய செயல்களும் அவரை வறுமையின் பிடியில் தள்ளியது. அதனை அவர் இந்த திருப்புகழ் பாடல்கள் மூலம் சொல்வதை நம்மால் உணர முடியும்.

அது மட்டுமல்லாமல் அவர் கடந்த கால வாழ்க்கையை மறைத்து வைக்காமல் அதில் இருந்த அனுபவத்தை வைத்து ஆன்மீக பாடமாக மாற்றியவர். மேலும், இந்த பாடலை வறுமை நீக்குவதற்காக மட்டும் பாடாமல் எந்த ஒரு நிலை வந்தாலும் நான் மாற மாட்டேன் அந்த நிலையில் உன்னை நான் வழிபாடு செய்வதற்கு தவற மாட்டேன் என்கின்ற ஒரு மனநிலையை நாம் கட்டாயம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US