வயதிற்கேற்றபடி திருஷ்டி கழிப்பது எப்படி?
சொல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். அதற்கு காரணம் ஒருவரது எதிர்மறை எண்ணம் நம்மை தாக்கக்கூடும்.அவர்கள் எண்ண அலைகள் நம்மை பாதிக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு.
மனிதனின் கண்பார்வைக்குத் தனித்த மகத்துவம் உண்டு. கண்பார்வை மூலமாகவே பார்க்கப்படும் பிற மனிதனின் மனநிலையையோ, உடல் நலத்தையோ, வாழ்க்கை நிலையையோ, மேன்மையாக்கிவிட முடியும் அல்லது சீா் குலைத்துவிட முடியும் என்கின்றனர்.
அதனால் தான் சித்தா்கள், யோகிகள், ஞானிகள் இவா்களின் அருட் பார்வை கிடைக்க ஒருவா் வாழ்க்கையில் மேன்மை அடைகிறார்கள். பொறாமை மிக்கவா்கள் பார்வையால் ஒருவனது உடல் நலம், தொழில், வியாபாரம் பாதிக்கப்படுவது உண்டு இப்படி கண் பார்வை மூலமாகப் பிறா்க்குப் பாதிப்பு ஏற்படுவதைக் கண்திருஷ்டி என்று கூறுவா்.
ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் லட்சியங்களும்,ஆசைகளும் உண்டு.அதற்காக மனிதன் தன் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு போராடுகிறான்.தன்னுடன் சமமான மனிதர் உயர்வடையும் பொழுது, சிலருக்கு உயர்வடையும் மனிதரை பார்க்கும்பொழுது ஏக்கமாகவும், பலருக்கு பொறாமையாகவும் எண்ணங்கள் தோன்றுகின்றன.
அப்படியாக வயதிற்கு ஏற்றார் போல் கண் திருஷ்டி கழிப்பது எப்படி என பார்ப்போம்.
குழந்தை திருஷ்டி கழிக்கும் முறை
பிறந்த குழந்தைகள் பார்ப்பதற்கே அத்தனை அழகு . அப்படி அழகு என்று சொல்லி கொஞ்சம் வார்த்தைகளும் திருஷ்டி ஆகிவிடக்கூடாது என்று தான் கருப்பு திருஷ்டி பொட்டு வைக்கின்றோம் . இதை . நெற்றியி லும் கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந் தையின் திருஷ்டி யை போக்கும். கோயில்களில் தருகின்ற ஹோம ரட்சையை வைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை!.
வாலிப திருஷ்டி கழிக்கும் முறை
ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நன்றாக மூடி இளைஞனையோ / வாலிப பெண்ணையோ கிழக்கு நோக்கி இருத்தி இடமிருந்து வலமா மூணு தடவையும் வலமிருந்து இடமா மூணு தடவையும் சுற்றி ,பின் சுற்றிய உப்பை தண்ணீரில் போடவேண்டும் . அப்படி செய்ய தண்ணீரில் உப்பு கரைவது போல் திருஷ்டி எல்லாம் கரைஞ்சி போய்விடும் என்பது நம்பிக்கை.
பெரியவர்களுக்கு திருஷ்டி கழிக்கும் முறை
ஊமத்தங்காய், படிகாரம் தெருமண் , இவைகளை சேகரித்துக் கொண்டு பெரியவர்களை தெருவாசலில்கிழக்கு முகமாக நிறுத்தி மண்சட்டிக்குள் ஊமத்தங்காய், படிகாரம், தெருமண் இவை மூன்றையும் போட்டு மண்சட்டி யை தலைக்கு இடமிருந்து வலமாகவும் வலமிரு ந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி தலை முதல் பாதம் வரை இறக்கி அப்படியே எடுத்துச் சென்று முச்சந்திகள் கூடும் இடத்தில் போட்டு உடைக்கவேண்டும்.
பிறகு அதை ஓரமாக பெருக்கித் தள்ளுங்கள். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் போகும். பின்னர் வீடு திரும்பி கை கால் கழுவி தலையில் சிறிது தண்ணீர் தெளித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையவும். பிள்ளையையும் அவ்வாறே செய்ய செய்து உள்ளே அழைத்துச் செல்லவும்.
மாதம் ஒருமுறை மூன்று கண் கொட்டாங்கச்சி எடுத்து அதை அடுப்பில் பற்றவைத்து ஒரு தட்டில் வைத்து சுற்றி தெருவில் ஓரமாக போடலாம்.
இன்னும் சில வீடுகளில் கடுகுமிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவற்றினை கையில் எடுத் துக் கொண்டு குழந்தையை உட்காரவைத்து திருஷ்டி எல்லாம் கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமிருந்து வலமாகவும் ,வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில் போடுவார்கள்.
இதுவும் ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரமே! இந்த திருஷ்டி பரிகாரங்கள் நம்முடைய முன்னோர்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வந்தவை ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |