பிறந்த குழந்தைகளுக்கு எப்பொழுது மொட்டை போட வேண்டும்?

By Sakthi Raj Apr 16, 2024 05:49 AM GMT
Report

நாம் சில பழக்கவழக்கங்கள் ,நடைமுறைகளை காரணம் தெரியாமலே பின் பற்றி வருகின்றோம்.இருப்பினும் சில சடங்குகள் சம்பிரதாயங்கள் காரணம் தெரியாமல் இருப்பது நல்லது.

ஏனென்றால் தெரிந்தால் மக்கள் அலட்சியம் காட்ட வாய்ப்புண்டு என்பதால் தான்,சிலவற்றை கால தாமதம் இன்றி செய்து முடிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர்.

அதில் பிறந்த குழந்தைக்கு மொட்டை போடும் வழக்கம் உண்டு.அதை மிக பெரிய விழாவாக கூட சிலர் நடத்துவர்.ஆனால் அதை நேர்த்திக்கடன் என்று நினைத்து  சிலர் பின்பற்றி வருகிறார்கள்.

பிறந்த குழந்தைகளுக்கு எப்பொழுது மொட்டை போட வேண்டும்? | Kulanthai Kuladeivam Vazhipadu Mottai Nerthikadan

இதற்கு பின்னணியில் உண்மை காரணம் ஒன்று இருக்கிறது அதை பற்றி பார்ப்போம்.

அதாவது ஒரு குழந்தை 10 மாதம் பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறது ,அங்கு இரத்தம் சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் தான் குழந்தை வளரும். 10 மாதமும் அந்த குழந்தை இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்து எவ்வளவு ஊறியிருக்கும்.

(16/04/2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

(16/04/2024) இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?


உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் முடி கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு.

பிறந்த குழந்தைகளுக்கு எப்பொழுது மொட்டை போட வேண்டும்? | Kulanthai Kuladeivam Vazhipadu Mottai Nerthikadan

அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர். ஒருவேளை மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

நேர்த்திக்கடன் இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.

பிறந்த குழந்தைகளுக்கு எப்பொழுது மொட்டை போட வேண்டும்? | Kulanthai Kuladeivam Vazhipadu Mottai Nerthikadan

மேலும் சிலர் மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான். நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US