கன்னி தெய்வங்கள் யார்?அவர்களை எப்படி வழிபடவேண்டும்?
கிராம புறங்களில் கன்னி தெய்வத்தின் வழிபாட்டை அதிகம் பார்க்கமுடியும்.அவர்களுக்கு கோயில்கள் எழுப்பி பெரிய அளவில் வழிபாடு செய்வார்கள்.
சிலருக்கு அந்த கன்னி தெய்வமே குல தெய்வமாக இருப்பதையும் பார்க்கமுடியும்.
கன்னி தெய்வங்கள் என்பவர்கள் யார் என்றால்?பெண்ணாக பிறந்து குழந்தை பருவத்தில் அல்லது பருவம் அடைந்து திருமணம் ஆகாமல் இறந்து போனவர்களை கன்னி தெய்வமாக வழிபடுவோம்.
அவர்கள் கடவுளாக அந்த வம்சத்தை காக்கும் தெய்வமாக இருந்து வருவார்கள்.இந்த கன்னி தெய்வங்களுக்கு சக்திகள் அதிகம்.
மேலும் சிலருக்கு கனவில் ஒரு சிறு குழந்தை அடிக்கடி வருகின்றது என்று சொல்லுவதுண்டு.அப்பொழுது அவர்கள் தலைமுறையை எடுத்து பார்த்தால் கன்னியாக யாரேனும் இறந்து போயிருக்கலாம் அவர்களை முறையாக வழிபட சொல்லி ஆந்த தெய்வம் நம் கனவில் காட்சி கொடுத்திருக்கும்.
கன்னி தெய்வங்கள் பொறுத்த வரைக்கும் அவர்களை நம் முன்னோர்கள் போல் சரியான முறையில் வழிபாடு செய்யவேண்டும்.
மேலும் திருமணம் ஆன பெண்கள் இந்த கன்னி தெய்வத்தை வழி பட அவர்கள் சுமங்கலி பலன்கள் கூடும்.
எந்த ஒரு குடும்பம் கன்னி தெய்வத்தின் வழிபாட்டை முறையாக கடைபிடித்து வருகின்றனரோ அவர்கள் குடும்பம் செல்வ சிறப்பாக செழித்தோங்கும் என்பது ஐதீகம்.
ஆடி மாதம் இந்த கன்னி தெய்வத்திற்கு உகந்தது.அந்த மாதத்தில் இந்த கன்னி தெய்வத்தை வீட்டில் வழிபடும் வேளையில் தெய்வத்தின் வயதிற்கு ஏற்ப துணிமணிகள் இனிப்புகள் வாங்கி வைத்து அவர்களை மகிழ்ச்சி படுத்தும் விதமாக வழிபடவேண்டும்.
மேலும் ஒரு கன்னி தெய்வத்தை சரியான முறையில் வழிபடாமல் அந்த தெய்வம் அழுவது போல் கனவு வந்தால் குடும்பத்தில் சிக்கல்கள் பிரச்சனைகள் வரப்போகின்றது என்று அர்த்தம்.
ஆக குடும்பம் காக்கும் கன்னி தெய்வங்களை முறையாக வழிபட்டு அவர்களின் அருள் பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |