216 முறை சஷ்டி கவசத்தை படிப்பதால் நடக்கும் மாற்றங்கள்
கலியுக வரதன் முருகப்பெருமான்.நிலையற்ற வாழ்வில் நிலையான நம்பிக்கை கடவுள்.அந்தநம்பிக்கை இல்லை என்றால் வாழ்க்கை அர்த்தமற்றதாக மாறிவிடும்.அப்படியாக முருகனின் கந்த சஷ்டி கவசம் அனைவரும் அறிந்தது.முருகப்பெருமான் மந்திரங்களில் மிகவும் சக்தி வாய்ந்தது இந்த கவசம்.
பொதுவாக சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். இந்த எல்லா தோஷத்தைப் போக்கி நல்வாழ்வு தருபவர் முருகப்பெருமான்.

அவருக்கு உகந்த நாள் சஷ்டி.சஷ்டி என்றால் ஆறு.முருகனுக்கோ ஆறு முகங்கள. சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர்.அவரை நாம் பற்றி கொண்டால் கடைசி நிமிடத்திலும் எதிர்பாராத மாற்றத்தை கொடுத்து வாழ்க்கையை சுகம் ஆக்குவார்.
முருகப்பெருமானை வழிபட வாழ்க்கையில் எதிரிகள் தொல்லை படி படியாக குறையும். மேலும் சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் கந்தசஷ்டி கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்கு செவ்வாய்க்கிழமை மாலையிலும் படிக்க விரைவில் பலன் கிடைக்கும்.

சஷ்டிக் கவசத்தை கந்தசஷ்டி விரத நாட்களில் ஒருநாளைக்கு 36 தடவை வீதம் ஆறு நாட்களில் 216 தடவை கூறினால் குழந்தை பாக்கியம் நினைத்த காரியம் நிறைவேறுதல் போன்ற நிறைய அதிசயங்களை அருளிச்செய்வார் முருகப்பெருமான்.
சஷ்டி கவசத்திற்கு அத்தனை சக்திகள் இருக்கிறது.ஆக வாழ்க்கையில் துயரம் என்றால் மனசஞ்சலம் அடையாமல் அமைதியாக அமர்ந்து முருகப்பெருமானை வணங்கி சஷ்டி கவசத்தை சொல்ல எல்லாம் நொடியில் மாறிவிடும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். | 
 
    
     
    
     
    
     
    
     
    
     
    
     
    
     
    
     
                 
                 
                                             
         
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        