கந்த சஷ்டி கடைசி நாள் விரதம் முடிக்கும் முறை

By Sakthi Raj Nov 07, 2024 08:30 AM GMT
Report

மிகவும் விஷேசமான கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து 5 நாள் அனுஷ்டிக்க பட்டு இன்று கடைசி நாளான ஆறாம் நாள் வந்து விட்டது.அப்படியாக இன்று தான் முருகப் பெருமான், சூரனை சம்ஹாரம் செய்து, தேவர்களை காத்தருளிய திருநாள் ஆகும்.

மேலும் முருகப் பெருமானின் அவதார நோக்கம் நிறைவேறிய தினமும் இன்றைய தினம் தான். பொதுவாக திருச்செந்தூர் தலத்தில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரத்தை கணக்கில் கொண்டே, கந்தசஷ்டியின் ஆறாவது நாள் வழிபாடும், விரதமும் கடைபிடிக்கப்படும்.

கந்தசஷ்டியின் ஆறாவது நாளில் எப்படி விரதம் இருக்க வேண்டும் மேலும் ஐந்து நாள் மேற்கொண்ட விரதத்தை எவ்வாறு முடிக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

கந்த சஷ்டி கடைசி நாள் விரதம் முடிக்கும் முறை | Kantha Sashti Viratham Mudikum Murai

இந்த கந்தசஷ்டியின் ஆறாம் நாள் முடிந்தால் முழு நேரமும் உணவு சாப்பிடாமல் விரதம் மேற்கொள்ளலாம். முடிந்தவர்கள் பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.ஆறாம் நாளில் காலையில் முருகனுக்கு உரிய ஆறு தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.

வீட்டின் பூஜை அறையில் ச,ர,வ,ண,ப,வ என்ற ஆறு எழுத்துக்கள் எழுதி அதில் தீபம் வைத்து வழிபட வேண்டும். காலையில் நைவேத்தியம் படைக்காமல், மாலையில் மட்டுமே நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். திருச்செந்தூரில் இந்த ஆண்டு மாலை 04.30 மணிக்கு பிறகே சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

வீட்டில் குளவிகள் கூடு கட்டுவது நல்லதா?கெட்டதா?

வீட்டில் குளவிகள் கூடு கட்டுவது நல்லதா?கெட்டதா?

 

அதனால் வீட்டில் இருந்து விரதம் இருந்தாலும், கோவிலில் சென்று விரதம் இருந்தாலும் சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு கந்தசஷ்டி விரதம் இருந்த அனைவரும் கண்டிப்பாக குளிக்க வேண்டும். குளித்து முடித்து விட்டு, மீண்டும் 6 தீபங்களையும் ஏற்றி, பூஜை செய்து வழிபட வேண்டும்.

சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு தான் சுவாமிக்கு நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்ய வேண்டும். கந்தசஷ்டியின் ஆறாவது நாளில் முருகப் பெருமானுக்கு பால், பழம் அல்லது 6 வகையான சாதங்கள் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம்.

கந்த சஷ்டி கடைசி நாள் விரதம் முடிக்கும் முறை | Kantha Sashti Viratham Mudikum Murai

சர்க்கரை பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், கற்கண்டு சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். முடியாதவர்கள் ஒரே சாதமாக சர்க்கரை பொங்கல் படைத்து வழிபடலாம்.

இந்த கந்த சஷ்டி தினத்தில் வழிபட உகந்த நேரமாக காலை 6 மணி முதல் 7 மணி வரை. மாலை 04.30 மணிக்கு சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு நைவேத்தியமாக படைத்த பொருட்களை மற்றவர்களுக்கு தானமாக வழங்க வேண்டும்.

முருக பக்தர்கள் பெருபாலானவர்கள் அன்று நாள் முழுவதும் உபவாசம் இருப்பது வழக்கம் என்பதால் சுவாமிக்கு படைத்த பிரசாதத்தை அவர்களுக்கு சாப்பிடக் கொடுப்பதால் நமக்கு பல கோடி புண்ணியம் வந்து சேரும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US