கணவரின் நீண்ட ஆயுளுக்கான காரடையான் நோன்பு - விரதம் இருப்பது எப்படி?
பெண்கள் மட்டுமே கடைப்பிடிக்கு விரதங்களில் காரடையான் நோன்பு மிகவும் சிறப்பு வாய்ந்த விரதமாகும். இது பங்குனி மாதத்தில் பெண்களால் கடைப்பிடிக்கும் விரதமாகும்.
இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் அழைப்பதுண்டு. 2024 ஆம் ஆண்டிற்கான இவ்விரதமானது வரவிருக்கின்றது. இதை எப்படி கடைப்பிடித்து நீண்ட காலம் தீர்க்க சுமங்கலியாக வாழலாம் என பார்க்கலாம்.
பூஜை செய்யும் முறை
விரதம் ஆரம்பிக்கும் முதல் நாள் அன்று காலையில் எழுந்து தலை குளித்து, வீட்டு வாசலில் கோலம் போட வேண்டும்.
பின் அதில் ஒரு விளக்கேற்றி, தலை வாழை இலை, இரண்டு அடை, உருக்காத வெண்ணை வைக்க வேண்டும்.
அடுத்து அதே இலையில் வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழங்கள் மற்றும் நோன்பு கயிறு, புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும்.
பின் அடையை வைத்து நைவேத்தியம் செய்து பிராத்திக்கலாம். அடுத்தாக தாலிச்சரத்தையும் நோன்பு கயிறையும் கழுத்தில் கட்டிக்கொள்ளலாம்.
நைவேத்தியத்திற்கு வைத்திருந்ததை சாப்பிட்டு விரதத்தை முடித்துக்கொள்ளலாம். பசுக்களுக்கு இதை சாப்பிடக் கொடுப்பது அவசியமாகும்.
இறுதியாக அந்நாளில் உச்சரிக்கப்படும் மந்திரங்களை கூறி இறைவனை பிராத்திக்க வேண்டும்.
2024 ஆம் ஆண்டு எந்த நேரத்தில் பூஜை செய்யலாம்?
2024 ஆம் ஆண்டு காரடையான் நோன்பானது மார்ச் 14 ஆம் திகதி அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது இன்றைய தினமாகும்.
காலை 6.40 முதல் பகல் 12.48 வரை விரதம் கடைப்பிடிக்கும் நேரமாகும்.