காரடையான் நோன்பு: பெண்கள் ஏன் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

By Sakthi Raj Mar 13, 2025 05:43 AM GMT
Report

விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்வது என்பது உடலுக்கும் மனதிற்கும் மிக பெரிய மாற்றத்தை கொடுக்க கூடியது. அப்படியாக,மாசி மாதத்தில் பெண்கள் கட்டாயம் கடைபிடிக்கவேண்டிய காரடையான் நோன்பு வருகிறது.

அந்த நாளில் பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் நாம் எண்ணற்ற பலன்கள் பெறலாம். மேலும்,பெண்கள் ஏன் கட்டாயம் இந்த காரடையான் நோன்பு இருக்கவேண்டும்? அதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? விரதத்தை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

இந்த காரடையான் நோன்பை சாவித்திரி விரதம், கெளரி விரதம், கெளரி நோன்பு, காமாட்சி விரதம் உள்ளிட்ட பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த விரதத்தை திருமணம் ஆன பெண்கள் மட்டும் அல்லாமல் திருமணத்திற்காக காத்திருக்கும் பெண்களும் விரதம் இருக்கலாம்.

அதாவது,பெண்களின் அவர்களின் மிக பெரிய வரமாக அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பதையே எண்ணுகிறார்கள். அப்படியாக, அவர்களின் கணவனின் உடல்நலம்,ஆயுள் நலன் கருதி வேண்டுதல் வைப்பதே காரடையான் நோன்பு ஆகும்.இந்த விரதம் மிகவும் எளியமையான மற்றும் சக்தி வாய்ந்த விரதம் ஆகும்.

காரடையான் நோன்பு: பெண்கள் ஏன் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் தெரியுமா? | Karadaiyan Nonbu 2025 Worship

புராணம்:

நாம் புராணங்களில் சத்தியவான் சாவித்திரி கதையை கேட்டு இருப்போம். அதாவது தன்னுடைய கணவனின் உயிரை எமனிடம் இருந்து போராடி மீட்டு எடுத்த பாக்கியம் கொண்டவள் தான் சாவித்ரி.

அதற்கு பலமாக இருந்தது அவள் இருந்த விரதமே ஆகும். விதியின் கட்டளையால் பெரும் செல்வந்தராக வாழ்ந்த சத்தியவான் சாவித்ரி அவர்களுடைய பெரும் செல்வம் மற்றும் நாடு அனைத்தையும் விட்டு காட்டுக்குள் வாழும் நிலை வந்தது.

அந்த சமயத்தில் சாவித்திரி தன் கணவனின் ஆயுள் பற்றிய ரகிசயம் தெரிந்து கொள்ள,செய்வதறியாது தன்னுடைய கணவனை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்று எண்ணி சாவிரித்திரி, அன்னை கெளரியை வேண்டி, காட்டில் தனக்கு கிடைத்த காராமணி, அரிசி, உருகாத வெண்ணெய் உள்ளிட்ட எளிமையான பொருட்களை படைத்து வழிபாடு செய்து வந்தாள்.

அந்த விரதம் மற்றும் பூஜையின் பலனாக யார் கண்ணுக்கும் தெரியாத எமன், சாவித்திரியின் கண்களுக்கு மட்டும் தெரிந்தார். தன்னுடைய கணவனின் உயிரை எடுத்து செல்ல வந்த எமனை விடாது துரத்தி பல உலகங்களைக் கடந்து இறுதியாக எமலோகத்தின் வாசல் வரை சென்றாள். 

அதாவது மனித உடலுடன் எமலோகம் செல்லும் அளவிற்கு ஆற்றல் பெற்ற அந்த பெண்ணை கண்டு ஆச்சரியப்பட்ட எமன். அதனால் மனம் இறங்கி எமன் உன் கணவனின் உயிரை தவிர எதுவேண்டுமாலும் என்னிடம் கேள்? தருகிறேன் என்றார் எமன்.

இதைக் கேட்ட சாவிரித்திரி, முதலில் தன்னுடைய கணவரின் தாய், தந்தைக்கு இழந்த கண் பார்வை வர வேண்டும். பிறகு இழந்த தங்கள் ராஜ்ஜியம் உள்ளிட்ட அனைத்தும் மீண்டும் கிடைக்க வேண்டும் என்றும் கேட்டாள்.

காரடையான் நோன்பு: பெண்கள் ஏன் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் தெரியுமா? | Karadaiyan Nonbu 2025 Worship

கடைசியாக, தான் தீவிர பதிவிரதை என்பதால் தனக்கு நல்ல குழந்தை பேறு வேண்டும் என்றும் கேட்டாள். சாவித்திரியை எப்படியாவது அங்கிருந்து அனுப்பி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த எமன், அவள் கேட்ட வரங்கள் அனைத்தையும் தருவதாக வாக்களித்தார்.

வரத்தை அளித்த பிறகு தான், கடைசியாக கேட்ட வரத்தில் சாவிரித்திரி எவ்வளவு நுட்பமாக தனது கணவரின் உயிரை கேட்டுள்ளாள் என்பதை எமன் புரிந்து கொண்டார். இருந்தாலும் தான் அளித்த வரத்தை திரும்ப பெற முடியாமல் சாவிரித்திரிக்கு, சத்தியவானின் உயிரை திரும்ப அளித்தார்.

ஆக,தான் இழந்த அனைத்தும் திரும்ப பெற மிக பெரிய சக்தியாக அமைந்தது அவள் இருந்த விரதம். இந்த நாளில் நாம் அம்பிகையை வேண்டி விரதம் இருந்து வேண்டுதல் வைத்தால் நாம் இழந்த அனைத்தயும் மீட்டு விடலாம் என்பது நம்பிக்கை.

வழிபடும் முறை:

இந்த விரதம் இருக்க நினைப்பவர்கள் முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து, மறுநாள் குளித்து காரடையான் நோன்பு இருப்பவர்கள் கார அடை மற்றும் இனிப்பு அடை செய்து, படைத்து வழிபட வேண்டும். இலை போட்டு நைவேத்தியம் படைப்பதாக இருந்தால் 4 வாழை இலைகள் படைத்து வழிபட வேண்டும்.

ஒருவேளை தட்டில் வைத்து படைப்பதாக இருந்தால் கார அடை, இனிப்பு அடை, வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, உருகாத வெண்ணெய் வைத்து படைத்து வழிபட வேண்டும்.

தாலி சரடு மாற்றும் முறை:

இந்த நாளில் பெண்கள் தாலி சரடு மாற்றுவது சிறந்த பாக்கியத்தை கொடுக்கும். அதாவது மாசி கயிறு பாசி போல் படரும் என்பது தான் பழமொழி. ஆக பெண்கள் நாளை தாலி சரடு மாற்ற விரும்புபவர்கள் பெண்கள் மஞ்சள் கிழங்குடன் தாலி கயிறை கட்டி, அம்மனின் பாதத்தில் வைத்து வழிபட்டு பிறகு கணவரின் கைகளாலேயோ அல்லது மூத்த சுமங்கலிகள் கைகளாலேயோ அல்லது தாங்களாகவோ கட்டிக் கொள்ளலாம். 

காரடையான் நோன்பு: பெண்கள் ஏன் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் தெரியுமா? | Karadaiyan Nonbu 2025 Worship

காரடையான் நோன்பு இருக்கும் நேரம்:

காரடையான் நோன்பு என்பது  மாசி மாதத்தின் நிறைவு நாள் மற்றும் பங்குனி மாதத்தின் துவக்க நாள் இணையும் நாளை தான் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு காரடையான் நோன்பு மார்ச் 14ம் தேதி வெள்ளிக்கிழமை.

அதோடு,மார்ச் 13ம் தேதி காலை 11.40 மணிக்கு துவங்கி, மார்ச் 14ம் தேதி பகல் 12.57 வரை பெளர்ணமி திதியில் உள்ளது. இந்த பௌர்ணமி திதியில் இருந்து பூஜை செய்து, தாலி சரடு அல்லது நோம்பு கயிற்றை கட்டிக் கொண்டு விரதம் இருக்கலாம்.

பூஜை நேரம்:

மார்ச் 14 காலை 6 முதல் 07.50 வரைகாலை 09.30 முதல் 10.20 வரை

தாலி சரடு கட்டும் நேரம்:

மார்ச் 14 காலை 07 முதல் 07.20 வரைகாலை 09.30 முதல் 10.15 வரை 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US