காரைக்காலில் மாங்கனி திருவிழா கொண்டாட்டம்
காரைக்காலில் மாங்கனித்திருவிழா முன்னிட்டு புனிதவதி, பரமதத்தர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அழைப்பிதழ் கொடுத்துள்ளது.
63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாருக்கு தனி கோயில் காரைக்காலில் அமைந்து உள்ளது.
அம்மையாரின் இறைவழிபாட்டை சோதிக்கும் பொருட்டு சிவ பெருமான் அடியார் வேடம் எடுத்து அம்மையாரின் வீட்டில் கணவன் கொடுத்த மாங்கனிகள் சாப்பிட்டு பின் கணவன் மாங்கனிகள் எங்கே என்று கேட்க, தன் இறை அருளால் அம்மையார் மாங்கனி கொண்டு வந்து கொடுத்ததும், இறைவனை காண கயிலாயத்திற்கு தலைகீழாக கையால் நடந்து செல்வதையும் சித்தரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா இன்று 19ம் தேதி மாப்பிள்ளை அழைப்பும், 20ம் தேதி காரைக்கால் அம்மையார் பரமதத்தர் செட்டியார் திருக்கல்யாணமும், இரவு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடும், மறுநாள் 21ம் தேதி சிவபெருமான் அடியார் கோலத்தில் வீதி உலா வருவதும் நடைபெறுகிறது.
அப்போது பக்தர்கள் மாங்கனி வீசும் வைபவம் நடக்கிறது. அன்று மாலை 3அம்மையார் சிவபெருமானுக்கு மாங்கனியுடன் அமுதுபடையல் நிகழ்ச்சி நடக்கும்.
இவ்விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் புனிதவதி,பரமத்தர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பாரம்பரியமான மஞ்சல் பத்திரிக்கையில் பக்தர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |