பூர்வ ஜென்ம வினைப்பயன் குறைய வேண்டுமா?
By Sakthi Raj
சிலருக்கு முன் ஜென்மம் வினைப்பயன் பற்றி எல்லாம் நம்பிக்கைகள் இருக்கும்.இந்த ஜென்மத்தில் அந்த பாவம் தொடர்ந்து அதனால் பல பிரச்சனைகள் வருகின்றது என்று எண்ணுவது உண்டு.
அவர்கள் செவ்வாய்க்கிழமை வரும் அஷ்டமி நாளில் விரதம் அனுஷ்டித்து மாலை நேரத்தில் பூஜைகள் செய்து வடை மாலை சாற்றி வழிபட வேண்டும்.
மறுநாள் காலை உணவு உட்கொண்டு விரதம் முடிக்க வேண்டும். நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுதல் கூடுதல் சுபம் கொடுக்கும்.
அப்படி செய்யும் பொழுது முன் ஜென்ம வினைப்பயன்கள் விலகும் என்பது நம்பிக்கை.
கோள்களின் தாக்கம் குறைய வேண்டுமா?
தயிர் அன்னம் நிவேதனம் செய்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். தொடர்ந்து அஷ்டமி நாளில் இதை கடைப்பிடிக்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |