மண் அகல் விளக்குகளில் எண்ணெய் கசியாமல் இருக்க எளிய வழிமுறைகள்
திருக்கார்த்திகை நெருங்கி விட்டது.பலரும் வீடுகளில் உள்ள அகல் விளக்குகள் சுத்தம் செய்து விளக்கு ஏற்ற தயார் ஆகி கொண்டு இருப்போம்.என்னதான் நாம் வருடம் வருடம் தீபம் ஏற்றினாலும் ஒவ்வொரு வருடமும் புது புது சந்தேங்கங்கள் நமக்கு வந்து விடும்.
மேலும் விளக்கு ஏற்றும் பொழுது எல்லோருக்கும் இருக்கும் மிக பெரிய சந்தேகம் அகல் விளக்கு ஏற்றும் பொழுது எண்ணெய் கசிவது தான்.இந்த எண்ணெய் கசிவால் வீடுகள் பிசுபிசுப்பாகுவதோடு சமயங்களில் வழுக்கி கீழே விழுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
நாம் இப்பொழுது அகல் விளக்கு ஏற்றும் பொழுது அதில் இருந்து எண்ணெய் கசியாமல் இருப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய எளிய வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
]
சிலர் விளக்கு ஏற்றும் பொழுது அதற்கு அடியில் நெயில் பாலிஷ், பெயிண்ட் போன்றவை பூசி வைப்பார்கள்.இருந்தாலும் அதை மீறி எண்ணெய் கசிவு ஏற்பட்டு விடும்.இல்லை என்றால் வெற்றிலை, வாழை இலை, அரச இலை இதற்கு மேல் தீபம் ஏற்றி வைக்கலாம்.
ஆனால் எல்லோருக்கும் இந்த இலைகள் கிடைக்குமா என்றால் பலருக்கும் அதற்கான வாய்ப்புகள் இருப்பது இல்லை.ஆக இவை எல்லாம் சரி செய்ய நாம் வீட்டில் துணி வாங்கு பொழுதும் கொடுக்கும் அட்டைகளை அல்லது வீட்டில் உள்ள ஏதேனும் அட்டை எடுத்து சிறிதாக விளக்குக்கு ஏற்றார் போல் வெட்டி அதற்கு மேல் விளக்குகள் வைக்கலாம்.
இவ்வாறு செய்யும் பொழுது அந்த அட்டை விளக்கில் எண்ணெய் கசிந்தாலும் எல்லாம் எடுத்து விடும்.மேலும்,எண்ணெய் தரையில் கசிந்து விட்டால் சிறிது அளவு கோதுமை மாவு எடுத்து அதில் போடு துணி வைத்து துடைத்து விடலாம்.
ஆக தீபம் ஏற்றுவது அவசியம் என்றாலும் நம்முடைய பாதுகாப்பும் மிக மிக அவசியம்.இந்த திருக்கார்த்திகை திருநாளில் நாம் குடும்பத்தோடு பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் கொண்டாடுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |