கருட புராணம்: ஒருவர் இறந்த பிறகு அவருடைய ஆன்மா எங்கே செல்கிறது தெரியுமா?
நாம் எல்லோருக்கும் ஒரு கேள்வி இருக்கும். நாம் இந்த உலகத்தை விட்டும் உடலை விட்டும் உயிர் பிறந்த பிறகு நம்முடைய ஆன்மா எங்கே செல்லும்? நம்முடைய ஆன்மாவிற்கு என்ன நடக்கும்? என்று பல்வேறு கேள்விகள் நமக்குள் இருக்கும்.
அப்படியாக கருட புராணத்தில் ஒருவர் இறந்த பிறகு அவர்களுக்கு என்ன நடக்கும்? அவருடைய ஆன்மா எங்கே செல்லும் என்பதை பற்றி சொல்கிறது. அதை பற்றி நாம் பார்ப்போம். மரணம் என்றால் எல்லோருக்கும் அதை ஏற்றுக்கொள்ள சற்று கடினமாக தான் இருக்கும்.
ஆனால் பிறந்தால் கட்டாயம் இறப்பு என்ற ஒரு விஷயத்தை யாராலும் எவராலும் தடுக்க முடியாது ஒன்று என்பதை நம் மனம் நன்றாக அறியும். இருந்தாலும் மரணத்தை ஏற்றுக்கொள்ள மனம் தடுமாற்றம் அடைந்தாலும் அந்த மரணத்திற்குப் பிறகு நம் ஆன்மாவிற்கு என்ன நடக்கும் என்று ஒரு கேள்வி எல்லோருக்கும் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.

நம்முடைய உலகம் நவீனத்தை நோக்கி பலவிதமான மாற்றங்களை அடைந்தாலும், நவீன அறிவியலால் பல ஆராய்ச்சிகளை கொண்டு மரணத்திற்கு பிறகு வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள முயற்சித்த பொழுதும் நமக்கு ஒரு தெளிவான விடை கிடைக்கவில்லை என்றுதான் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
மேலும் விஞ்ஞானிகள் மரணத்திற்கு அருகில் உள்ள அனுபவங்களை (NDEs) பகுப்பாய்வு செய்துள்ளனர். ஆனால் ஒரு ஆன்மாவினுடைய பயணம் மர்மமாகவே இருப்பதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இருப்பினும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே வேதமான கருட புராணத்தில் இந்த மர்மத்தின் பதில்களை நமக்கு சொல்லிவிட்டு சென்றிருக்கிறது.
இந்த கருட புராணம் என்பது விஷ்ணு பகவானுக்கும் கருடனுக்கும் இடையிலான நடக்கக்கூடிய ஒரு உரையாடல் ஆகும். அதில் மரணத்திற்கு பின்பு ஆன்மா அனுபவிக்கும் தகுதி தீமை மற்றும் மறுபிறவி போன்றவை பற்றி மிகத் தெளிவாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் கருட புராணப்படி ஒரு நபரின் மரணம் உடலின் முடிவு மட்டுமே.
ஆனால் அவருடைய ஆன்மா முடிவடைவதில்லை, ஆன்மாவிற்கு இறப்பு இல்லை என்பதை தெளிவாக தெரிவித்து இருக்கிறது. ஆனால் ஒருவருடைய ஆன்மாவானது அவர்களுடைய உடலை விட்டு பிரிந்து வெளியேறிய உடனே மிகக் கடுமையான வலியை அனுபவிப்பதாக சொல்கிறார்கள்.

மரணத்திற்குப் பிறகு நடக்கக்கூடிய அந்த முதல் இரவு ஆன்மாவிற்கு மிகவும் கடினமான நேரம் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய ஆன்மா நம்முடைய உடலை விட்டு வெளியேறிய பிறகும் அது இன்னும் உயிருடன் இருப்பது போல் உணர்கிறது. பசி தாகம் கோபம் அன்பு மற்றும் பாசம் இவை அனைத்து உணர்வுகளும் அவை தேடிக் கொண்டிருக்கிறது.
அதனால் ஆன்மாவானது குடும்பத்தையும் உறவினர்களையும் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அந்த ஆன்மாவை யாராலும் பார்க்கவோ அவை பேசுவதை கேட்கவும் முடியாது. இறந்த ஆன்மாவானது அந்த உடலை பார்த்து மீண்டும் அதற்குள் போக இயலுமா என்று ஒரு ஏக்கத்துடன் இருக்கிறது.
ஆனால் எமதூதர்கள் அதை தடுத்து விடுவார்கள். அதனால் தான் இந்து மதம் படி இறந்த உடனையே பிண்டபிரதானம் மற்றும் பிரேதகாரியங்கள் செய்யப்படுகின்றன. ஆன்மா அலையாமல் இருப்பதை உறுதி செய்ய அது அமைதியை காண முடியும்.
அதோடு ஒருவர் பூமியில் வாழ்ந்த காலத்தில் நல்ல செயல்களை செய்திருந்தார்கள் என்றால் அவர்களுடைய ஆன்மாவை விஷ்ணுவின் தேவதைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தேரில் சொற்கலோகத்திற்கு அழைத்துச் செல்வதாக சொல்கிறார்கள். அதுவே பாவங்கள் செய்திருந்தார்கள் என்றால் அவர்களுடைய நிலை சற்று மோசமானதாக நரக லோகத்திற்கு அழைத்து சொல்லப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |