2026 கேது பெயர்ச்சி: பொருளாதாரத்தில் வளர்ச்சி காணும் டாப் 3 ராசிகள்
ஜோதிடத்தில் கேது பகவான் நிழல் கிரகமாக இருக்கிறார். இவர் ஒரு மனிதனுக்கு என்ன விஷயங்களை செய்தாலும் அதில் ஆழ்ந்த ஒரு சிந்தனையை கொடுத்து அதில் இருந்து ஒரு தெளிவை கொடுக்க கூடியவர்.
அப்படியாக கேது ஒரு மனிதனுக்கு எவ்வாறு ஒரு தடைகள் தாமதம் கொடுக்கிறாரோ அந்த அளவிற்கு அவர் மிகப்பெரிய அளவில் வெற்றியையும் வாய்ப்புகளையும் வழங்க கூடியவர்.
அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு கேது பெயர்ச்சி நடக்க உள்ளது. இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தில் ஏற்றமும் குடும்ப வாழ்க்கையில் மன மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கப் போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்கு கேது பெயர்ச்சியானது இவர்களுக்கு வாழ்க்கையில் எதிர்பாராத ஒரு நிறைய வாய்ப்புகளை கொடுத்து இவர்களை முன்னேற்றக் காத்திருக்கிறது. இவர்கள் இந்த காலகட்டங்களில் ஆன்மீக ரீதியாகவும் நிறைய பணிகளில் ஈடுபட காத்திருக்கிறார்கள். இந்த காலகட்டங்களில் இவர்களுக்கு மன அமைதி கிடைக்கப் போகிறது. குடும்பத்தில் நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகள் எல்லாம் விலகி ஒரு சுமுகமான நிலையை கொடுக்கப் போகிறார்.
சிம்மம்:
சிம்ம ராசிக்கு கேது கேது பெயர்ச்சியானது தொழில் ரீதியாக ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்கப் போகிறது. இவர்கள் புதிய மனிதராகவே இந்த வருடத்தில் மாறப்போகிறார்கள். குடும்ப வாழ்க்கையில் இவர்களுக்கு கணவன் மனைவி இடையே ஒரு நல்ல அன்பு அதிகரிக்கும். ஒரு சிலர் குடும்பங்களோடு வெளிநாடு சுற்றுலா பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்போகிறது. உங்களுடைய அங்கீகாரம் உணர்ந்து உங்களுக்கு நிறைய பாராட்டுக்கள் வந்து குவிய போகிறது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு கேது பெயர்ச்சியானது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகவே அமையப்போகிறது. தொழில் ரீதியாக இவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அளவில் புதிய மாற்றமும் தொழில் ரீதியாக இவர்களுக்கு ஒரு பதவி உயர்வும் கிடைக்க காத்திருக்கிறது. உடன் பிறந்தவர்களிடம் இவர்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகள் நடக்கப் போகிறது. பொருளாதார ரீதியாக இவர்களுக்கு நல்ல அமைப்பு உண்டாக்குவதோடு திருமண வாழ்க்கையும் ஒரு மகிழ்ச்சியானதாகவும் மன நிறைவாகவும் இந்த ஆண்டு இவர்களுக்கு அமையப் போகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |