குழந்தை வரம் அருளும் தாண்டிக்குடி முருகப்பெருமான்

By Sakthi Raj Aug 07, 2024 08:30 AM GMT
Report

முருகனுக்கு பல கோயில்கள் விஷேசமான கோயில்கள் இருக்கிறது.அதிலும் பழனி முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்.

மேலும் முருகன் பற்றி ஒரு பழமொழி இருக்கிறது.‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என்று.அதாவது முருகப்பெருமான் பழநி மலையில் இருந்து தாண்டிக் குதித்து வந்த மலைதான் கொடைக்கானலில் உள்ள தாண்டிக்குடி தலமாகும்.

குழந்தை வேலவனாக அருளும் தாண்டிக்குடி முருகன் கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் அதை பற்றி பார்ப்போம்.

குழந்தை வரம் அருளும் தாண்டிக்குடி முருகப்பெருமான் | Kodaikanal Thandikudi Murugan Kulanthai Varam

ஒரு முறை அகத்தியரின் சீடனான இடும்பன் கயிலாயத்திலிருந்து சிவகிரி, சக்திகிரி என்று இரு மலைகளை சுமந்து வந்தார்.அந்த மலைகளில் ஒன்றுதான் பழனிமலை. மற்றொன்று கொடைக்கானலில் இருக்கும் தாண்டிக்குடி மலையாகும்.

முருகப்பெருமான் இடும்பனிடம், ‘பழநி மலையில் இருந்து இந்த மலைக்கு தான் எப்படி வருவது?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு இடும்பன், ‘தாண்டிக்குதி’ என்று கூறியிருக்கிறார் இடும்பன்.

முருகப்பெருமானும் அதைக்கேட்டு தாண்டிக் குதித்த தலம்தான் தாண்டிக்குதியாகும். அந்தப் பெயரே காலப்போக்கில் மக்களால் தாண்டிக்குடியானது.

தர்ப்பணம் செய்யும் முன் இந்த விஷயங்களை கட்டாயம் மறந்து விடக்கூடாது

தர்ப்பணம் செய்யும் முன் இந்த விஷயங்களை கட்டாயம் மறந்து விடக்கூடாது


இங்கே பாலமுருகன் தாண்டிக்குதித்தபோது ஏற்பட்ட பாதச்சுவடுகளை இன்றும் காண முடியும். முருகன் இருக்கும் இடத்தில் அவரின் வாகனமும் இருக்கவேண்டும் அல்லவா?

அதன் ஆச்சிரியமாக பாறைகளில் வேல், மயில், சேவல், பாம்பு ஆகியவற்றின் படிமங்கள் இயற்கையாகவே உருவாகியிருப்பதைக் காண முடியும்.

மேலும் மாதமும் கிருத்திகை தினம் அன்று இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அப்போது இத்தல முருகப்பெருமானை ராஜ அலங்காரத்தில் தரிசிக்கலாம்.

ஆடிக் கிருத்திகை இங்கே விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

குழந்தை வடிவேலவனாக காட்சி கொடுக்கும் தாண்டிக்குடி முருகப்பெருமானை தரிசிக்க நம் வாழ்க்கையில் உள்ள அனைத்து துன்பமும் விலகி எல்லாம் செல்வங்ககும் கிடைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US