கூத்தாண்டவர் கோயில் திருவிழா; தாலிக்கட்டி இரவு முழுவதும் நடனமாடிய திருநங்கைகள்

By Kirthiga Apr 24, 2024 12:56 PM GMT
Report

உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் பூசாரி கையால் தாலிகட்டிக் கொண்டு திருநங்கைகள் கும்மியடித்து ஆடிப்பாடி கொண்டாடியுள்ளனர்.

இரவு முழுவதும் நடனமாடிய திருநங்கைகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள கூவாகம் கிராமத்தில் இருக்கும் கூத்தாண்டவர் கோயிலின் சித்திரை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.

அந்தவகையில் இந்த ஆண்டிற்கான திருவிழாவும் கடந்த 9 ஆம் திகதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகியது.

இந்த திருவிழாவில் கலந்துக்கொள்ள பல இடங்கில் இருந்து பெண்கள் வருகை தந்துள்ளனர். அத்தோடு கூழ் குடங்களை வைத்து படையலும் செய்துள்ளார்கள்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக எப்போதும் நிகழுவது, திருநங்கைகளுக்கு தாலிக்கட்டுவதே ஆகும்.

கூத்தாண்டவர் கோயில் திருவிழா; தாலிக்கட்டி இரவு முழுவதும் நடனமாடிய திருநங்கைகள் | Koothandavar Temple Chithirai Festival

இதில் கலந்துக்கொள்வதற்காக இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்துக்கொண்டு பூசாரி கையால் தாலிக்கட்டிக் கொள்வது வழக்கம்.

பின் கற்பூரத்தை ஏற்றி அரவானின் பெருமையை கூறி கும்மியடித்து நடனமாடி கொண்டாடுவார்கள்.

அதையடுத்து இன்று காலை தேரோட்டம் நடைபெற்றுள்ளது. வீதியுலா செல்லும் தேரானது பந்தலடிக்கு சென்றவுடன், அங்கு அரவான் களப்பலி இடும் நிகழ்வு நிகழும்.

அதன்போது தாலிக்கட்டிக்கொண்டிருந்த திருநங்கைகள், தாலியை கழட்டி வீசி வெள்ளை புடவை அணிந்து வளையல்களை உடைத்துஒப்பாரி வைத்து சோகமாக வீடு திரும்புவார்கள்.

 மேலும் நாளை விடையாத்தியும், 26 ஆம் திகதி தர்மர் பட்டாபிஷேகமும் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US