கோயிலில் அர்ச்சனை செய்வது ஏன்?

By Sakthi Raj May 15, 2024 06:30 AM GMT
Report

நமது பாவங்களையும், பிரச்னைகளையும் தீர்க்கக்கூடிய ஒரே சக்தி இறைவனுக்கு மட்டுமே உண்டு.கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்.என சொல்வார்கள்.

ஆம், கடவுள் இல்லாத இடத்தில் நமக்கு பாதுகாப்பு இல்லை என்பது அதன் பொருள். அதுபோலவே, அர்ச்சனை என்பது கோயில்களில் இறைவனை வழிபடும் முறைகளில் ஒன்று.

பூக்களாலும் குங்குமத்தாலும் இறைவனுக்கு உகந்த நாமாக்களால் அர்ச்சனை செய்து அவரது கருணைக்கு பாத்திரமாவது நமது வழிபடும் முறையாகும். அர்ச்சனை என்றால் அர்ச்சிப்பது எனப் பொருள்.

கோயிலில் அர்ச்சனை செய்வது ஏன்? | Koyil Archanai Hindu News Aanmeegam Vazhipadu

கோயிலுக்குச் சென்று ஒருவர் தனது குலம், கோத்திரம், பெயர், நட்சத்திரத்தைச் சொல்லி சங்கல்பம் செய்து இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டு தங்கள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

ஒருவர் கோத்திரத்தைச் சொல்லும்போது அது அவரது பரம்பரையைக் குறிக்கிறது. அவர் பிறந்த நட்சத்திரத்தையும், பெயரையும் சொல்லும்போது அவருக்கென தனி அடையாளத்தைக் கொடுக்கிறது. குருக்கள் சங்கல்பம் செய்யும்போது நிகழ்காலத்தைப் பற்றிய விவரங்களைக் கூறுகிறார்.

ஆகவே, ஒரு மனிதர் தனது கோத்திரம், நட்சத்திரம், பெயர் ஆகியவற்றைச் சொல்லி, தான் இன்னார் என அறிமுகப்படுத்திக்கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்கிறார்கள்.

பிரதோஷ நிகழ்வை எத்தனை முறை பார்த்தால் என்னென்ன பலன்கள்

பிரதோஷ நிகழ்வை எத்தனை முறை பார்த்தால் என்னென்ன பலன்கள்

 

இதனால் அவர்கள் தனது கோரிக்கைகளை இறைவனிடம் தனிப்பட்ட முறையில் சொல்லி பலன் பெறுகின்றனர்.

அர்ச்சனை என்பது ஒருவரது பிறந்த நாள், திருமண நாள் அல்லது ஏதேனும் தொழில் தொடங்கும்போது இதுபோன்ற சிறப்பு மிக்க நேரங்களில் செய்யப்படுவது ஆகும்.

மக்கள் தங்களுக்கு வாழ்வில் முக்கியமான நாட்கள் என்று கருதும் நாட்களில் கோயிலுக்குச் சென்று அர்ச்சனைக்குக் கொடுக்கிறார்கள்.

அர்ச்சனை செய்வது இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் இருக்கக்கூடும் அல்லது இன்னும் தமது வாழ்வில் உயர்வதற்காகவும் இருக்கும். துன்பங்களை தாங்கும் மன உறுதி கொடுக்கக்கூடியதும் ஆகும்.

கோயிலில் அர்ச்சனை செய்வது ஏன்? | Koyil Archanai Hindu News Aanmeegam Vazhipadu

ஒருசிலர் இறைவனின் பெயரில் அர்ச்சனை செய்கிறார்கள். அது, தான் மட்டும் நல்லாயிருந்தால் போதாது, எல்லோரும் எல்ல வளமும் பெற்று வாழ வேண்டும் என்பதற்காகவும் கொடுக்கின்றனர்.

கோயிலில் அர்ச்சனை செய்வது என்பது வீட்டில் பூஜை செய்வதைக் காட்டிலும் சக்தி பெற்றது. அங்கிருக்கும் தெய்வம் மந்திரம்,பூஜை வழிபாடுகளாலும் மிகவும் சக்தி பெற்றதாக இருக்கிறது.

சுவாமிக்கு அர்ச்சனை செய்வதென்பது கேட்டதைக் கொடுக்கும் ஆற்றல் பெற்றது. சிலர் குறிப்பிட்ட தெய்வங்களுக்கு மட்டுமே குறிப்பிட்ட நாளில் அர்ச்சனை கொடுக்கிறார்கள். இது பரிஹாரம் போன்றது.

சஷ்டி அன்றும் பிரதோஷ நாளிலும் இப்படி செய்வதை நாம் பார்க்க முடியும். ஒருவர் தான் பிறந்த நட்சத்திரத்தன்று கோயிலில் அர்ச்சனை செய்வது நலத்தைக் கொடுக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US