மூடப்பட்டிருக்கும் கோயில்களிலும் உண்டு இறை சக்தி

By Sakthi Raj May 15, 2024 12:30 PM GMT
Report

அவசரமாகத் தேர்வு எழுதவோ அல்லது வேறு ஏதாவது முக்கியமான விஷயங்களுக்காகப் போக வேண்டியவர்கள் கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபட்டு, அங்கு தரப்படும் தீர்த்தம் மற்றும் பிரசாதத்தை வாங்காமல் கோயில் முற்றத்திலேயே நின்று பிரார்த்தனை செய்துவிட்டுச் சென்றால் போதும் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு.

கோயில்களின் கட்டட நிர்மாண அமைப்பின் விளைவாகவே நமக்கு இவ்வாறு வணங்கினாலும் பலன் கிடைக்கின்றது.

மூடப்பட்டிருக்கும் கோயில்களிலும் உண்டு இறை சக்தி | Koyil Vazhipadummurai Aanmeegam Hindu News

வாஸ்து சாஸ்திரத்தின் தனித்தன்மையின் காரணமாக நாம் எந்தக் கோயிலில் சோதனை செய்தாலும் அங்கே நவீன விஞ்ஞானம் ‘ஜியோ எனர்ஜி’ என்று அழைக்கும் பூசக்தி பரவிக் கொண்டிருப்பதை உணரலாம்.

பக்தியுடன் கோயிலுக்குச் செல்லும் பக்தருக்கு அனுகூலமான சக்தி அளிப்பதோடு அவரில் நன்மையான மாற்றங்களையும் காணலாம். சாதாரண, பூமியில் அசைவற்ற சக்தியான ஸ்டாடிக் எனர்ஜியே காணப்படும்.

கோயிலில் அர்ச்சனை செய்வது ஏன்?

கோயிலில் அர்ச்சனை செய்வது ஏன்?


ஆனால், கோயில் நிர்மானத்திற்கான வாஸ்து திட்டங்களின் விளைவாக அது சலன சக்தி, டைனமிக் எனர்ஜியாக மாறுகின்றது. இந்த சக்தியே பக்தருக்குள் சென்று பரவுகின்றது.

இது தினமும் பூஜைகள் நடைபெறும் கோயில்களில் மட்டும் கிடைப்பதில்லை என்றும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. பூஜைகள் முறையாக செய்யப்படாத ஒரு கோயில் வளாகத்தில் நின்று வணங்கி வந்தாலும் இந்த நன்மை கிடைக்கும்.

மூடப்பட்டிருக்கும் கோயில்களிலும் உண்டு இறை சக்தி | Koyil Vazhipadummurai Aanmeegam Hindu News

அதாவது, சக்தி நிலை அதிகரிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘கோயில்களின் சக்தி செயல்பாடுகள்’ என்ற தலைப்பில் டாக்டர் பிரபாத் குமார் போத்தார் சுக்ருதீன்தரா ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் ஜர்னல் (அக்டோபர் 1999)ல் இது சம்பந்தமாக மிக விரிவாக எழுதி உள்ளார்.

சென்னைக்கு அருகாமையில் மாமல்லபுரத்தில் பல வருடங்களுக்கு முன்பு அழிந்துபோன ஒரு கோயிலில் இவர் செய்த ஆராய்ச்சிகளின் அடிப்படையிலேயே இது எழுதப்பட்டது.

மேல் குறிப்பிட்டுள்ள கோயிலில் சிவலிங்கம் உடைந்து சிதறி பூஜைகள் எதுவும் செய்யப்படாமல் நாசம் அடைந்திருந்தாலும், அங்கே செல்பவர் உடலில் சக்திநிலை அதிகரித்ததாகக் கண்டார்.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது, கோயில் முற்றத்தில் சென்று சேர்பவர்களுக்கும் சக்தி அளிக்க கோயில் அமைப்புக்கு இயலும் என்பதே.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்



+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US