நாளைய ராசி பலன்(26-10-2025)

Report

மேஷம்:

இன்று உங்கள் வீடுகளில் விருந்தினர் வருகையால் சில நன்மைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்:

பொருளாதார சிக்கல்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. பெரியவர்களின் ஆசீர்வாதத்தை பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் யோகம் சிலருக்கு உண்டாகும்.

மிதுனம்:

சில முக்கியமான முடிவுகளை எடுத்து வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்லக்கூடிய அற்புதமான நாள். தந்தை உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.

கடகம்:

ஒரு சிலருக்கு தாய் மாமன் வழி உறவுகளால் சில சிக்கல் உண்டாகும். பொருளாதார ரீதியாக மிக கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் நலனில் முழுமையாக அக்கறை செலுத்த வேண்டிய நாள்.

சிம்மம்:

சுற்றி இருப்பவர்களை பற்றி தெரிந்து கொள்வீர். தேவைக்கேற்ற வருமானம் வரும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி ஒத்திப்போகும். அவசரத் தேவைக்கு நண்பர்கள் உதவிபுரிவர்.

கன்னி:

உயர் கல்விக்கான முயற்சிகள் வெற்றியை பெரும். திருமண தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவை பெரும். வேலை தொடர்பகா சிலர் வெளிநாடு செல்லும் யோகம் உருவாகலாம்.

துலாம்:

உடல் ரீதியாக நீங்கள் அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சகோதரன் வழி உறவால் உங்களுக்கு நன்மை உண்டாக கூடிய நாள்.

செல்வம் வளம் அருளும் 4 வரி மந்திரம்

செல்வம் வளம் அருளும் 4 வரி மந்திரம்

விருச்சிகம்:

அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள். வருமானத்தில் தடையுண்டாகும். பொதுப் பிரச்னையில் ஈடுபடுவதற்கு முன் யோசிக்கவும். சிலர் மறைமுகமாக  தொல்லை கொடுப்பர்.  

தனுசு:

உடல் நிலையில் நீங்கள் முழு கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணக்கூடும். பணம் தொடர்பான விஷயங்களில் ஏற்பட்ட சிக்கல் விலகும்.

மகரம்:

தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரம் செலவு செய்வீர்கள்.வருமானத்தில் முன்னேற்றம் இருக்கும்.

கும்பம்:

உங்கள் வீடுகளில் சுப நிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தைகள் சுபமாக முடியும். வங்கி தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். சகோதரி வழி உறவால் நன்மை உண்டாகும்.

மீனம்:

குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். நெருங்கியவர்களிடம் மனம் விட்டு பேசுவீர்கள். தொலை தூர பயணத்தில் கவனம் தேவை. நன்மையான நாள். மதிப்பு உயரும்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US