2025 கிருஷ்ண ஜெயந்தி எப்பொழுது ? அன்று இந்த விஷயங்களை செய்ய மறக்காதீர்கள்

By Sakthi Raj Aug 06, 2025 12:10 PM GMT
Report

விஷ்ணு பகவானின் தசாவதாரங்களில் எட்டாவது அவதாரமான கிருஷ்ணர் பிறந்த தினம் இந்த மாதம் வருகின்றது. அந்த நாளை கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடுகின்றோம். அப்படியாக, இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது. கிருஷ்ணர் இந்த உலகத்திற்கு பல அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார்.

மேலும், கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ண பகவானே நம் வீட்டிற்கு வருவதாக நம்பப்படுகிறது. அப்படியாக, கிருஷ்ண ஜெயந்தி அன்று நம் வீடுகளில் எவ்வாறு விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

2025 கிருஷ்ண ஜெயந்தி எப்பொழுது ? அன்று இந்த விஷயங்களை செய்ய மறக்காதீர்கள் | Krishna Jeyanthi 2025 Worship In Tamil

கிருஷ்ணர் பல லீலைகளையும் குறும்புகளையும் செய்து உள்ளார். அந்த கதைகளை நாம் கட்டாயம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும். அதை அவர்கள் கேட்பதால் குழந்தைகளின் அறிவு மேம்படும்.

அதோடு, கிருஷ்ண ஜெயந்தி வழிபாட்டை காலை நேரத்தில் செய்வதை விட மாலை நேரத்தில் செய்வது நமக்கு மிக சிறந்த பலன் அளிக்கும். காரணம் கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்தாதாக புராணங்கள் சொல்கின்றது.

100 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் திரிகிரஹி ராஜயோகம்- இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையே மாறப்போகிறதாம்

100 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் திரிகிரஹி ராஜயோகம்- இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையே மாறப்போகிறதாம்

அதனால், கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் காலை நேரம் முழுவதும் விரதம் இருந்து மாலை நேரத்தில் நெய்வேத்தியம் படைத்து பிறகு பூஜை முடிந்து அந்த நெய்வேத்தியத்தை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து நாமும் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.

2025 கிருஷ்ண ஜெயந்தி எப்பொழுது ? அன்று இந்த விஷயங்களை செய்ய மறக்காதீர்கள் | Krishna Jeyanthi 2025 Worship In Tamil

கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய், சர்க்கரை, அவல், முருக்கு, சீடை இனிப்பு சீடை, அதிரசம் தேன்குழல் போன்ற பலகாரங்களை படைத்து வழிபாடு செய்வது சிறப்பானதாகும். மேலும், கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிகாலையில் அரிசி மாவினால் கோலமிட வேண்டும்.

முடிந்தவர்கள் மாவிலை தோரணங்கள் கட்டலாம். பின்னர் அரிசிமாவைக் கொண்டு குழந்தையின் கால் பாத தடயங்களை வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரை பதிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் குழந்தையாக கிருஷ்ணரே நம் வீட்டிற்கு வருகை தருவதாக ஐதீகம்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US