100 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் திரிகிரஹி ராஜயோகம்
ஜோதிடத்தில் கிரக மாற்றங்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு கிரக மாற்றங்களும் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான நன்மை தீமைகளை கொடுக்கிறது. அப்படியாக, கடந்த ஜூலை 26, 2025 அன்று சுக்கிரன் மிதுன ராசியில் நுழைந்தார்.
மிதுனத்தில் ஏற்கனவே குரு பகவான் இருக்கின்றார். அதோடு, ஆகஸ்ட் 18, 2025 அன்று சந்திர பகவானும் நுழைய உள்ளார். இந்த சேர்க்கைகளால் திரிகிரஹி ராஜயோகம் உருவாக உள்ளது. இதனால் 12 ராசிகளுக்கும் பல்வேறு தாக்கங்கள் நடக்க உள்ளது.
அதில் குறிப்பிட்ட சில 3 ராசிகளுக்கு மிக பெரிய நன்மைகளும் அதிர்ஷ்டமும் காத்திருக்கின்றதாம். அவர்கள் எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு இந்த திரிகிரஹி யோகம் ஒரு புதிய தொடக்கத்தை கொடுக்க உள்ளது. இவர்கள் வாழ்க்கையில் அடுத்தக்கட்ட முன்னேற்ற நகர்வை நோக்கி பயணம் செய்ய உள்ளார்கள். நீண்ட நாட்களாக திருமண வரன் தேடுபவர்களுக்கு நினைத்த வரன் அமையும். குடும்ப வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்கள் விலகும்.
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இந்த திரிகிரஹி யோகம் வாழ்க்கையில் நல்ல தெளிவைக் கொடுக்கப்போகிறது. இவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மரியாதையும் மதிப்பும் கிடைக்க உள்ளது. புதிய தொழில் தொடங்குவதற்கான யோசனையும் அதனால் வெற்றிகளும் கிடைக்கப் போகின்றது. உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் சந்திக்க போகிறீர்கள்.
கன்னி:
கன்னி ராசியினருக்கு திரிகிரஹி யோகத்தால் வாழ்க்கையில் மிக பெரிய அதிர்ஷ்ட கதவுகள் திறக்க உள்ளது. இவர்கள் இத்தனை வருடம் சந்தித்த பிரச்சனைகள் எல்லாம் விலகப் போகிறது. அலுவலகத்தில் உங்களுக்கு சம்பள உயர்வு, மற்றும் உங்கள் திறமையை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பாக அமையப் போகிறது. தொழிலில் திடீர் ஜாக்பாட் அடிக்கும் காலம் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







