இரண்டு மூலவர் கொண்ட சிவன் கோயில் எங்கு உள்ளது தெரியுமா?
1.அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில்,அத்திமுகம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்து உள்ள புகப்பெற்ற சிவன் கோயில்களில் ஐராவதேஸ்வரர் திருக்கோயிலும் ஒன்று.இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.பொதுவாக ஒரு கோயில் என்று எடுத்துக்கொண்டால் ஒரு மூலவர் இருப்பார்.
ஆனால் இங்கு இரண்டு மூலவரை நாம் தரிசிக்க வேண்டும்.காமாட்சி உடனுறை ஐராவதேஸ்வரர் ஒரு கருவறையிலும், அகிலாண்டேஸ்வரி உடனுறை அழகேசுவரர் தனிக் கருவறையிலும் அருள்பாலிக்கிறார்கள்.மேலும் சூரியனின் பூஜைக்காக நந்தி மூலவரை காட்டிலும் சற்று விலகி இருக்கும் தலமாகும்.
இக்கோயில் இருப்பிடம் பெயர் காரணம் என்னவென்றால் ஒருமுறை ஹஸ்தி என்றால் யானை இங்கு வந்து சிவனை வழிபட்டதால் இத்தலத்திற்கு “ஹஸ்திமுகம்” என பெயர் வந்தது. இதுவே காலப்போக்கில் “அத்திமுகம்” என அழைக்கப்படுகிறது.மேலும் ஐராவத என்னும் யானை இங்கு வழிபட்டதால் ஐராவத யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது.
ஒரே கருவறையில் ஐராவதேஸ்வரரும் அவருக்கு பின்னால் காமாட்சி அம்மனும் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள தெட்சிணாமூர்த்தி அகங்காரத்தை ஒழித்து ஞானத்தை வழங்குகிறார். எனவே தான் இவர் “சம்கார தெட்சிணாமூர்த்தி” எனப்படுகிறார்.
தென்மேற்கு மூலையில் மிகப்பெரிய பழமையான பாம்பு புற்று ஒன்று உள்ளது. ஆரம்பகாலத்தில் மணலால் ஆன இந்த புற்று காலப்போக்கில் இறுகிப் பாறையாக மாறியதிலிருந்தே இந்த புற்றின் பழமையை அறியலாம்.
இடம்
அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில், அத்திமுகம், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
2.அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில்,ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் புகழ்ப்பெற்ற சிவன் தலங்களில் முக்கியமான தலங்களில் இதுவும் ஒன்று.இங்கு மூலவர் சந்திரசூடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இங்குள்ள அம்மனின் திருநாமம் மரகதாம்பிகை.மேலும் அம்பாள் முன்பாக ஸ்ரீ சக்கரம் ஒன்று இருக்கிறது.அந்த ஸ்ரீ சக்கரம் முன்பாகத்தான் நவசண்டி என்ற யாகம் ஆடிமாதம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது.மேலும் மரகதாம்பிகை அம்மன் சிலை மரகதம் போல் பச்சை நிறமாக இருப்பது அதிசயம்.
அம்மன் முகத்தில் உள்ள மூக்கில் மூக்குத்தி நுழைய துவாரம் இருப்பது அதிசயத்தின் ஒன்றாக கருதபப்டுகிறது.மேலும் அம்மனின் பின்னல் தலைமுடி ஜடை குஞ்சத்தோடு இருப்பது பார்ப்பதற்கு அழகாய் இருக்கும்.இம்மலைக்கு வடக்கு பக்கம் மகா விஷ்ணு (வெங்கட் ரமணர் சுவாமி) மலைக்கோயிலும், தெற்கு பக்கம் பிரம்மா (பாதம் மட்டும்) மலைக்கோயிலும் உள்ளது.
மும்மூர்த்திகளும் ஒரு சேர மலையாக ஒரே நேர்கோட்டில் உள்ளது சிறப்பம்சம்.
இடம்
அருள்மிகு சந்திரசூடேசுவரர் திருக்கோயில், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை
3.அருள்மிகு காலபைரவர் திருக்கோயில்,கல்லுக்குறிக்கை
கால பைரவரை வழிபட்டால் வாழ்க்கையில் எந்த ஒரு பயம் என்பதே இருக்காது.முற்காலத்தில் வாழ்ந்து வந்த ரிஷிகளும், முனிவர்களும் எங்கு சென்றாலும் சிவனின் அம்சமான காலபைரவரின் மூலமந்திரத்தை ஜெபித்து எந்த வித பயமும் இல்லாமல் இருந்திருக்கிறார்கள்.
அதனால் தான் காலபைரவரின் கோயிலை கிருஷ்ணகிரியை ஆட்சி செய்த மன்னர்கள் கட்டியுள்ளதாக இங்குள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த காலபைரவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றி இருக்கும் கிராம மக்கள் அவர்கள் தங்களுடைய குல தெய்வமாகவே வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கோயில் பிரகாரத்தில் தென்முகக்கடவுள், வள்ளி தெய்வானையுடன் முருகன் மட்டும் கோயிலில் ஒரு மேடையில் இரண்டு அடி உயரமுள்ள காலபைரவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் காலபைரவர் சுயம்புலிங்கமாக உள்ளார். லிங்கத்தின் நெற்றியில் சூலம் அமைந்துள்ளது.
இந்த சுயம்பு லிங்கத்தைக் காண கல்லாலான பலகணி அமைக்கப்பட்டுள்ளது. பலகணியில் உள்ள துளைகள் வழியாகவே லிங்கத்தைக் காண முடியும்.இங்கு வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் கால பைரவர் எதிரி பயம் நீக்கி மன நிம்மதியை தந்தருள்கிறார்.
ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் சிறப்புப் பூசைகள் நடத்தப்படுகின்றன. ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை இராகுகாலத்தில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. தேய்ப்பிறை அஷ்டமியன்று சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது.ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றியுள்ள கிராம மக்களால் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இடம்
அருள்மிகு காலபைரவர் கோயில், கல்லுக்குறிக்கி, கிருஷ்ணகிரி மாவட்டம் – 635001.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை
4.ஸ்ரீ மத் வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயில்,கோபசந்திரம்
பொதுவாக சிவன் கோயில்களில் தான் நந்தி இருக்கும். ஆனால் இங்கு விசேஷமாக பெருமாள் கோவிலில் நந்தி சிலை வைத்து பூஜை செய்யும் பழக்கம் இருந்து வருகிறது. ஒருமுறை கோட்டகுட்டா கிராமத்தை காலரை நோய் தாக்கியதால் கிராமம் பெரும் அழிவை சந்தித்தது.
பிற பல ஆண்டுக்கு பின் இந்த இடத்தில் பல ஊரின் மக்கள் ஒன்றுகூடி மாட்டு சந்தை நடத்தி வந்தனர் அப்படி மாட்டு சந்தைக்கு வந்த மாடுகளில் ஒன்று புதருக்குள்இருந்த இந்த வெங்கடேஸ்வர ஸ்வாமியின் சிலையை கண்டு தினமும் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு சென்று வர ஆரம்பித்திருக்கிறது.
இதை கண்டு அந்த மாட்டு சந்தைக்காரரான வெங்கட்ரமணாபா. 1878 ஆம் ஆண்டு சிலையை மலை மீது வைத்து கோயில் கட்டி வழிபட்டு வந்தார். அதன் பின் 1888ஆம் ஆண்டு. முதல் இப்பகுதியில் தேர் திருவிழா நடத்த அமைக்கப்பட்டது.
பிறகு சித்திரை மாதம் கோபுரமும் கட்டி காளை மாடு ஒன்று சிலையை கண்டுபிடித்ததால் அதற்கும் நந்தி சிலை வைத்து பூஜை செய்து வருகின்றன
இப்படி பெருமாள் கோவிலில் நந்தி சிலை வைத்து பூஜை செய்யும் பழக்கம் இங்கு மட்டுமே இருப்பதால் இக்கோயில் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது.
இடம்
ஸ்ரீ மத் வெங்கடேஸ்வரா சுவாமி திருக்கோயில்,கோபசந்திரம் ஓசூர்-635109
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் 8 மணி வரை
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |