ஜோதிட கணிப்பு பலிக்குமா?கிருஷ்ணர் சொல்லும் உண்மை என்ன?
மனிதன் வாழ்க்கையில் ஜோதிடம் என்பது அவனுடைய ஆசிரியராக இருந்து வழிநடத்தும் ஒரு முக்கிய அங்கமாகும்.அப்படியாக பலரும் அந்த ஜோதிடத்தை நம்புகிறார்கள் பலருக்கு ஜோதிடத்தின் மேல் ஒரு நம்பிக்கை வருவதில்லை.இருந்தாலும் காலம் ஜோதிடம் நம்பாதவர்களையும் ஒரு சுழலில் தன் வசம் ஆக்கிக்கொள்கிறது.
அப்படியாக,எதிர்காலத்தை கணிக்கும் ஜோதிடம் உண்மை தானா?நடந்தவை,நடக்கப்போவதை துல்லியமாக கணிக்க முடியுமா?என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.நம்முடைய சந்தேகத்திற்கு பதில் அளிக்கும் விதமாக பகவான் கிருஷ்ணர் பதில் அளிக்கிறார்.அதை பற்றி பார்ப்போம்.
அதாவது என்னதான் மிக பெரிய ஜோதிடராக இருந்தாலும் அவர்களால் ஒருவருடைய வாழ்க்கையை 99%மட்டுமே கணிக்க முடியும்.இதற்கு உதாரணம் மஹாபாரதத்தில் இருக்கிறது.அதாவது,துரியோதனன், பாண்டவர்களை அழிப்பதற்கு போருக்கான சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம் கேட்கிறார்.
இருந்தாலும் மறுப்பு தெரிவிக்காமல் சகாதேவன் துரியோதனனுக்கு பாரத போருக்கான சிறந்த நாளை குறித்து கொடுக்கின்றான்.அந்த அளவிற்கு சகாதேவன் ஜோதிடத்திற்கு உண்மையாக இருந்தார்.அப்படியாக பாரத போரில் கர்ணன் இறக்கும் தருவாயில் தான் பாண்டவர்களுக்கு கர்ணன் அவர்களுடன் பிறந்த மூத்த சகோதரர் என்ற உண்மை தெரியவந்தது.
இதனால் சகாதேவன் மிகுந்த வேதனையில் இருந்தான்.மூன்று காலமும் கணித்து சொல்லும் ஜோதிடத்தால் கூட இதை கணிக்கமுடியவில்லை என்று சகாதேவன் ஜோதிடம் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கிறார். அதன்படியே பாரத போர் முடிந்து 18 நாட்கள் கழித்து சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, "கிருஷ்ணா ஜோதிடம் என்பது பொய்தானே என்று கேட்கிறார்.
அதற்கு கிருஷ்ணர் சொல்கிறார் ஜோதிடம் பற்றி எல்லாம் அறிந்த நீயே இப்படி சொல்வது சரிதானா என்று என்கிறார்.அதற்கு சகாதேவன் "கிருஷ்ணா ஜோதிட கணிப்பால் அனைவருடைய பிறப்பின் ரகசியம் அறிந்து கொண்டேன் ஆனால் கர்ணன் தன்னுடைய அண்ணன் என்ற ரகசியம் தெரிந்து கொள்ளமுடியவில்லையே கிருஷ்ணா என்றார்.ஆக,ஜோதிடம் என்பது பொய் தானே என்றார்.
சகாதேவன் சொல்வதை எல்லாம் பொறுமையாக கேட்டுகொண்டு இருந்த கிருஷ்ணர்,சகாதேவா ஜோதிடம் வழியாக எல்லாம் நீ அறிந்து கொண்டால் பின் நான் எதற்கு?எப்படிப்பட்ட சிறந்த ஜோதிடனாக இருந்தாலும் நிச்சயம் அவர்களால் 99 சதவீதம் மட்டுமே தங்களால் கணிக்க முடியும் என்றார் கிருஷ்ணர்.
இதை கேட்ட சகாதேவனுக்கு அவனுடைய அறிவு கண் திறந்தது.இறைசக்தியின் வலிமை புரிந்தது.அதனால் ஜோதிட கணிப்புகள் எப்படியாகினும் மனதில் இறைபக்தியுடன் ஒரு விஷயத்தை அணுகினால் பகவான் அருளால் எப்பேர்ப்பட்ட அதிசய நிகழ்வுகளும் நடக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |