குபேரன் அருளை பெற வணங்க வேண்டிய திருத்தலம்
செல்வ வளம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது குபேர வழிபாடுதான். அப்படியாக அந்த குபேரனின் பரிபூர்ண அருளை பெற நாம் வணக்க வேண்டிய திருத்தலம் தேவூர் தேவபுரீஸ்வர் ஆவார்.
இப்பொழுது அந்த ஆலயத்தை பற்றிய சிறப்புகளை பார்ப்போம்.
இத்திருத்தலம் திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம்செல்லும் வழியில் அமைந்து உள்ளது.
இத்தலத்தின் இறைவனாக தேவபுரீஸ்வரர், இறைவியாக மதுரபாஷினி, தேன்மொழியம்மையும் அருள் பாலிக்கின்றனர்.
தல வரலாறு:
ராவணன் குபேரனிடம் போரிட்டு அவனது செல்வ கலசங்களை எடுத்துச் சென்றார். வருத்தமடைந்த குபேரன் தனது செல்வங்களை மீண்டும் கிடைக்க பல தலங்களுக்கு சென்று வழிபட்டார்.
அப்படி வழிபாடு செய்து வரும்போது இத்தலத்தில் உள்ள சிவனுக்கு வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் செந்தாமரை பூக்களால் அர்ச்சித்து வழிபாடு செய்தார்.
குபேரன் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் , குபேரனுக்கு அந்த செல்வ கலசங்கள் கிடைக்க செய்ததாக தல புராணங்கள் கூறுகிறது.
மேலும், இக்கோயில் சிறந்த குரு ஸ்தலமாக விளங்குகிறது .ஆதலால் இங்கு வழிபாடு செய்வதால் குரு சம்பந்தப்பட்டமான தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம்.
நாம் செல்வம் பெருகவும், இழந்த செல்வங்கள் மீண்டும் பெறவும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும்,குபேரனின் பரிபூர்ண அருளை பெற தேவபுரீஸ்வரரை வழிபாடு செய்வது சிறப்பானதாக அமையும் என்று கூறுகின்றன.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |