குபேரன் அருளால் வாழ்நாள் முழுவதும் யோகம் பெரும் ராசிகள்

By Sakthi Raj May 17, 2024 08:00 AM GMT
Report

இந்து சமய சாஸ்திரப்படி குபேரர் செல்வ செழிப்பிற்கான கடவுளாக கருதப்படுகிறார். வாழ்வில் பணத்தேவை ஏற்படும் போது பொதுவாக மக்கள் அன்னை லட்சுமியையும் குபேரரையும் வணங்குவது வழக்கம்.

குபேரரை வழங்கினால் அனைத்து விதமான செல்வங்காளும் கிடைக்கும்.ஒரு மனிதனுக்கு குபேரரின் அருள் இருந்தால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் நிதி நெருக்கடி ஏற்படாது. அவர் வறுமையை எதிர்கொள்ள வேண்டிய நிலையே இருக்காது

12 ராசிக்காரர்கள் மீதும் குபேரர் பாரபட்சம் காட்டாமல் அருள் புரிகிறார். எனினும், ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிகள் இவருக்கு மிகவும் பிடித்த ராசிகளாக இருக்கிறார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

குபேரன் அருளால் வாழ்நாள் முழுவதும் யோகம் பெரும் ராசிகள் | Kubeeran Sivan Selvavalam Parigaranal Rasi News

ரிஷபம்

 ரிஷப ராசி அன்னை லக்ஷ்மிக்கு பிடித்த ராசியாக கருதப்படுகின்றது. இந்த ராசிக்காரர்கள் குபேரனைத் தொடர்ந்து வழிபடுவது நிதி பலத்தை அதிகரிக்கும்.

குபேரர் இவர்களின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றி வைக்கிறார். இவர்கள் வாழ்வில் என்றும் பணத்திற்கான பற்றாக்குறை ஏற்படாது.

கடகம்

கடக ராசி சந்திரனுக்கு மிகவும் பிடித்த ராசியாகும். கடக ராசிக்காரர்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் பணம் சம்பாதிப்பதால் குபேரர் அவர்களின் கடின உழைப்பு மற்றும் நேர்மைக்கு ஏற்ப பலன்களை வழங்குகிறார்.

அவர்கள் தங்கள் குடும்பத்திற்காக அர்ப்பணிப்புடன் இருப்பதோடு, தங்களிடம் உள்ள பணத்தை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

குபேரன் அருளால் வாழ்நாள் முழுவதும் யோகம் பெரும் ராசிகள் | Kubeeran Sivan Selvavalam Parigaranal Rasi News

துலாம்

துலா ராசிக்காரர்கள் குபேரரின் செல்லப் பிள்ளைகளாக இருப்பதால் அவர்கள் எதை செய்ய நினைத்தாலும் அதை முற்றிலுமாக வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்.

இவர்களுடைய ஜாதகத்தில் குபேரர் சுபமான ஸ்தானத்தில் இருந்தால் இவர்கள் வாழ்வில் செல்வந்தர்களாக மாறி அவ்வாறே இருப்பதை யாராலும் தடுக்க முடியாது. குபேரர் அருளால் இவர்களுக்கு எப்போதும் நிதி நெருக்கடி ஏற்படுவதில்லை. 

இவர்கள் இருக்கும் செல்வத்தை பிறருக்கு தானம் செய்து அதில் மகிழ்ச்சி காண்பார்கள்.

முக்கிய நிகழ்வின் பொழுது பெரியவர்களிடம் திருநீறு வாங்குவது ஏன்?

முக்கிய நிகழ்வின் பொழுது பெரியவர்களிடம் திருநீறு வாங்குவது ஏன்?


தனுசு

 குரு பகவான் தனுசு ராசியின் அதிபதியாக இருக்கிறார். குரு மற்றும் குபேரரின் அருளால் தனுசு ராசிக்காரர்கள் புத்திசாலித்தனம் மற்றும் வணிகத் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

குபேர பகவான் அவர்களின் அதிர்ஷ்டத்தை ஒளிரச்செய்து, அபரிமிதமான செல்வத்தைப் பெறச் செய்கிறார். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US