கோடீஸ்வர யோகத்தை கொடுக்கும் குபேர விளக்கு.. வீடுகளில் எப்படி ஏற்ற வேண்டும் ?
இந்த உலகத்தில் வாழக்கூடிய மனிதர் யாருக்கு தான் செல்வம் வேண்டாம் என்று சொல்வார்கள். இருந்தாலும் செல்வம் மிக்க மனிதர்களுக்கே இந்த மாயை உலகில் மதிப்பு என்ற நிலையானது. அந்த வகையில் இந்த செல்வ வளத்தை அதிகளவில் பெற வேண்டும் என்றால் கட்டாயம் கடின உழைப்பு எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு இறைவனுடைய அருட்பாவை தேவை.
அந்த வகையில், நம்முடைய இந்து மதத்தில் செல்வத்திற்கு அதிபதியாக விளங்கக்கூடிய குபேரனை நாம் சரணடைந்து விட்டால் நமக்கு செல்வ வளம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். இந்து மதப் புராணங்களில் குபேரன் வடக்கு திசையின் அதிபதியாகவும் தேவர்களின் செல்வத்தின் காவலராகவும் விளங்குகிறார்.
குபேரனுடைய கரங்களில் பொற்கலசம், நவரத்தினங்கள், செல்வ மூட்டை போன்றவை நாம் பார்க்க முடிகிறது. இதுதான் அவருடைய அடையாளமாகவும் இருக்கிறது. மேலும், பல புராணங்களின் அடிப்படையில் குபேரன் மகாலட்சுமி பரிபூர்ண அருளை பெற்ற ஒரு சிறந்த பக்தராகவும் இருக்கிறார்.

அதனால், பலர் வீடுகளில் மகாலட்சுமி தேவியுடன் குபேரரும் வழிபாடு செய்கிறார்கள். அந்த வகையில், குபேரன் ஒரு மிகப்பெரிய சிவபக்தர். இவர் சிவனை நோக்கி கடும் தவம் செய்து பெரும் செல்வங்களை நிர்வாகிக்கக்கூடிய பொறுப்பை பெற்றார் என்றும் சொல்லப்படுகிறது.
குபேரர் அருளைப் பெற முகுந்த நாள் எது?
இவ்வளவு அற்புதங்கள் நிறைந்த குபேரரை வழிபாடு செய்வதற்கு வியாழக்கிழமை உகந்ததாக இருக்கிறது. வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. குரு என்பது ஞானம், செல்வம், செழிப்பு அடையாளம் ஆகியவற்றை குறிக்கக் கூடியவராக இருக்கிறார்.
அவர் வியாழக்கிழமை வழிபாடு செய்கின்ற பொழுது குபேர பூஜையில் நெல்லிக்கனி வைத்து வழிபாடு செய்வது சிறந்த பலன்களை கொடுக்கும். நெல்லிக்கனி ஆரோக்கியத்தில் அடையாளமாகவும் செல்வ வளம் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கிறது. புராணங்களில் மகாலட்சுமி நெல்லி மரத்தில் வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது.

குபேர விளக்கின் மகிமை :
அதேபோல், குபேர வழிபாட்டில் குபேர விளக்கேற்றி வழிபாடு செய்வது மிகவும் முக்கியமானது கருதப்படுகிறது, ஒரு தட்டில் அல்லது ஒரு மனையில் பச்சரிசி பரப்பி அதில் ஒரு நாணயம் வைத்து அதன் மீது விளக்கேற்றி வடக்கு திசையை நோக்கி வழிபாடு செய்ய வேண்டும்,
வடக்கு திசை என்பது குபேரருக்கு உரிய திசையாகும், மேலும், வாசனை மலர்கள் கொண்டு குபேரனுக்கு பூஜை செய்வது மன அமைதியையும் பக்தி உணர்வையும் கொடுக்கும். இவ்வாறு செய்கின்ற பொழுது வீடுகளில் இருள் விளக்கி நீங்காத வெளிச்சமும் செல்வமும் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |