குலதெய்வத்தின் முழு அருளை பெற நாம் செய்யவேண்டிய எளிய பரிகாரம்
ஒரு மனிதனுக்கு கட்டாயம் அவன் குலதெய்வத்தின் பரிபூர்ண அருள் கிடைக்கவேண்டும்.அப்பொழுது தான் வாழ்க்கையில் எந்த தடங்கலும் இல்லாமல் அவனும் அவன் குடும்பமும் மகிழ்ச்சியாக வாழமுடியும்.இருந்தாலும் சில வீடுகளில் குலதெய்வம் வழிபட சில தடங்கல் ஏற்பட்டு கொண்டு இருக்கும்.
அப்படியாக நாம் இப்போது நம் வீட்டில் செல்வம் பெருகி,குடும்ப நலன் உண்டாக குலதெய்வத்தின் பரிபூர்ண அருளை பெற செய்யவேண்டிய எளியபரிகாரத்தை பற்றி பார்ப்போம்.
செல்வத்திற்கு அதிபதியாக இருப்பவள் மஹாலக்ஷ்மி தயார்.அவளின் பரிபூர்ண அருள் கிடைத்தால் மட்டுமே நம்முடைய வீட்டில் பொருளாதார நெருக்கடிகள் இல்லாமல் சந்தோஷமாக வாழமுடியும்.ஆக ஒரு மனிதனுக்கு மஹலக்ஷ்மி தேவியின் அருள் கிடைக்க வேண்டும் என்றாலும் அதற்கு குலதெய்வத்தின் பார்வை இருக்கவேண்டும்.
அப்பொழுது தான் தயார் நம் வீட்டிற்கு வருகை தந்து அருள் புரிவாள்.இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் நமக்கு குலதெய்வத்தின் அருள் எவ்வளவு முக்கியம் என்று.அப்படியாக வீட்டில் பொருளாதார நஷ்டம் உண்டாகாமல் இருக்கவும்,கடன் சுமை அதிகரிக்காமல் இருக்கவும் குலதெய்வம் கோயிலுக்கு சென்று குலதெய்வத்திற்கு அபிஷேகம் செய்த சந்தனத்தை வாங்கி வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
அதோடு தினமும் அந்த சந்தனத்துடன் மஹாலக்ஷ்மியின் அம்சம் பொருந்திய நெய் கலந்தும் நெற்றியில் வைத்து கொள்ளவேண்டும்.இவ்வாறு தினமும் நம்முடைய நெற்றியில் வைத்து கொள்ள நாம் நேர்மறை ஆற்றல் கொண்டு ஈர்க்க படுவோம்.
அதே போல் நம்முடைய கஷ்டங்கள் எதிரிகள் தொல்லை,கண்திருஷ்டி விலகி தினமும் மதியம் 12 மணிக்குள் சூரிய பகவானுக்கு தீப ஆரத்தி காட்ட வேண்டும்.
இந்த தீபமானது நல்லெண்ணெய், நெய், தேங்காய் எண்ணெய் மூன்றும் சம அளவு கலந்து பஞ்சுத்திரி போட்டு ஏற்றி சூரிய பகவானுக்கு ஆரத்தி காட்டும் பொழுது மகாலட்சுமி தாயாரின் பரிபூரணமான அருளை பெற முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |