சிறந்த பலன்களை தரும் பௌர்ணமி குலதெய்வ வழிபாடு

By Sakthi Raj Oct 06, 2024 08:25 AM GMT
Report

ஆன்மீகத்தில் நாம் எதை பற்றி தெரிந்து கொள்கின்றோமோ இல்லையோ கண்டிப்பாக நாம் கட்டாயம் குலதெய்வ வழிபாட்டை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.

குலதெய்வம் இவர்கள் தான் நம்முடைய குலம்காக்கும் தெய்வம்.ஒருவர் வாழ்வில் பிடிப்போடு வாழ நல்ல முன்னேற்றம் அடைய ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்க கட்டாயம் குலதெய்வத்தின் அருள் அவசியம்.

அப்படியாக நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் இப்பொழுது வெளியூர் சென்று வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

சிறந்த பலன்களை தரும் பௌர்ணமி குலதெய்வ வழிபாடு | Kuladeivam Parigarangal

ஆதலால் பலருக்கும் தங்களுது குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும் வாய்ப்புகள் குறைந்து விட்டது.ஆனால் இன்னும் சிலர் வெளிநாடுகளுக்கே சென்றாலும் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்து வருவார்கள்.

கிரக தோஷங்களை நிவர்த்தி செய்ய நாம் செல்ல வேண்டிய ஆலயம்

கிரக தோஷங்களை நிவர்த்தி செய்ய நாம் செல்ல வேண்டிய ஆலயம்


அதனால் அவர்களுடைய குடும்பம் சிறந்த நிலையில் இருப்பதை நாம் பார்க்கமுடியும்.மேலும் எவர் வீட்டில் குலதெய்வ வழிபாட்டை தவற விடுகிறார்களோ அவர்கள் வீட்டில் பல தடைகள் தொடர்ந்து வருவதை நாம் பார்க்கமுடியும்.உதாரணமாக தொழில் வீழ்ச்சி,வேலையில் முன்னேற்றம் இல்லாமை குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமை போகுதல் போன்றவற்றை அவர்கள் தொடர்ந்து சந்தித்து கொண்டே வருவதை நாம் பார்க்கமுடியும்.

சிறந்த பலன்களை தரும் பௌர்ணமி குலதெய்வ வழிபாடு | Kuladeivam Parigarangal

அப்படியானவர்கள் அந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபட அவர்கள் கட்டாயம் குலதெய்வத்தின் அருள்பெறுவது அவசியம் ஆகிறது.

வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பவர்கள் பிற நாட்களில் குலதெய்வத்தின் அருளை பெறுவதை காட்டிலும் பெளர்ணமி நாள் அன்று குலதெய்வம் சென்று அன்று 27 நெய் அகல் தீபம் ஏற்றிவர வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை பார்க்க முடியும்.

மேலும் நீண்ட நாள் பணக்கஷ்டம் ,மனக்கஷ்டம் தீரும்,தொழில் முடக்கம் திருமண தடை மோசமான தசா/ புக்திகளின் பாதிப்பு இவைகளில் இருந்து அவர்களுக்கு நல்லதொரு நிவாரணம் கிடைக்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
bakthi@ibctamil.com
Email US