குலதெய்வம் வீட்டிற்கு வர செய்ய வேண்டிய பரிகாரம்
Report this article
ஒரு குடும்பத்திற்கு குலதெய்வ அருள் என்பது மிகவும் அவசியம்.காரணம்,குலதெய்வ அருள் பார்வை இல்லை என்றால் அந்த வீட்டில் செய்யும் காரியங்களில் தடை உண்டாகும்.அப்படியாக,சிலரது வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்தாலும் அவர்களால் குலதெய்வத்தின் முழு அருளை பெற முடிவதில்லை.
இதற்கு அவர்கள் வீட்டில் உள்ள வாஸ்து பிரச்சனை மற்றும் அவர்களின் கிரக மாற்றங்களாக கூட இருக்கலாம்.அவ்வாறான வேளையில் நாம் எவ்வாறு குலதெய்வ வழிபாடு செய்யவேண்டும்?குலதெய்வம் நம் வீட்டிற்கு வந்து அருள் புரிய என்ன விஷயங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று பார்ப்போம்.
பொதுவாக வீடுகளில் எதிர்மறை ஆற்றல் இருந்தால் குலதெய்வம் நம் அருகில் வர தடையாக அமைந்து விட்டும்.ஆக அவ்வாறு நீங்கள் உணர்ந்தால் வீட்டில் ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொண்டு அதில் சுத்தமான தண்ணீர் ஊற்றி கொஞ்சம் மஞ்சள் தூள் போட்டு அதில் மூன்று மயிலிறகை உள்ளே வைத்து விடுங்கள்.
மயிலிறகு முருகப்பெருமான் அருளை கொடுக்கும் ஒரு பொருளாகும். பின்னர் அதனுடன் மூன்று வேப்பங்கொழுந்தினை வையுங்கள். இது அம்பாளின் அருளை பெற்று தரும். பொதுவாக குலதெய்வத்தை அறியாதவர்கள் அம்பாள் அல்லது முருக வழிபாட்டை மேற்கொள்வார்கள்.
இந்த கண்ணாடி டம்ளரை யாருடைய கைகளுக்கும் எட்டாதவாறு வீட்டின் வரவேற்பறையின் மேற்பகுதியில் வையுங்கள். அனைவரின் கண்களுக்கும் இது தெரிய வேண்டும். டம்ளருக்கு மஞ்சள் குங்குமம் வையுங்கள்.
அதோடு வரம் ஒருமுறையாவது நிலை வாசலை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.மேலும் அதற்கு தினமும் பூஜை செய்யவேண்டும்.வீட்டின் நிலை வாசல் முக்கிய அங்கமாகும்.அங்கு குலதெய்வம் வாசம் செய்வதாக ஐதீகம்.
இவ்வாறு செய்து வர நிச்சயம் வீட்டில் நடக்கும் மாற்றங்களை காணலாம்.குலதெய்வத்தின் அருளால் உங்கள் காரியம் வெற்றி அடையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |