ஸ்ரீ ராமபிரானுக்காக போருக்கு சென்ற பேரரசர்.. நடந்த உண்மை சம்பவம்

By Sakthi Raj Mar 26, 2026 06:18 AM GMT
Report

மகாவிஷ்ணுவின் அவதாரமாக ஸ்ரீ ராம அவதாரம் இருக்கிறது. ஸ்ரீ ராமரின் கதையை கேட்பவர்களுக்கு நிச்சயம் அவர் மீது அளவு கடந்த அன்பும் காதலும் வராமல் இருக்காது.

அதாவது மனிதர்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட பிள்ளை ஒருவர் பெற வேண்டும் என்பதற்கு உதாரணமாகவும், எப்படிப்பட்ட அண்ணனை ஒருவர் பெற வேண்டும் என்பதற்கு சான்றாகவும், எல்லா பெண்களும் ராமனை போல் ஒரு கணவன் வேண்டும் என்ற எண்ணுகின்ற அளவிற்கு ஸ்ரீ ராமபிரான் எல்லா விஷயங்களிலும் சிறந்து விளங்கினார்.

அப்படியாக, ராமனுக்காக போருக்கு கிளம்பிய பேரரசர் உடைய கதை ஒன்று இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம். அதாவது இந்த நிகழ்வு குலசேகர ஆழ்வார் வாழ்க்கையில் நடந்த சிலிர்க்க வைக்கக்கூடிய அதிசய நிகழ்வாகவே இருக்கிறது.

ஸ்ரீ ராமபிரானுக்காக போருக்கு சென்ற பேரரசர்.. நடந்த உண்மை சம்பவம் | Kulasekara Azhwar Sri Ramar Devotee Story

மேஷ ராசியில் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்.. யாருக்கு அதிர்ஷ்டம்?

மேஷ ராசியில் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்.. யாருக்கு அதிர்ஷ்டம்?

குலசேக ஆழ்வார் என்பவர் கேரளாவின் சேர மன்னராக இருந்தவர். அவர் ராமாயணத்தை உயிருக்கு நிகராக போற்றிக் கொண்டிருப்பவர். தினமும் ராமாயண சொற்பொழிவு கேட்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் இராமாயண கதையை வெறும் கதையாக பார்க்காமல் அதை தன் கண் முன்னால் நடக்கக்கூடிய உண்மைச் சம்பவமாகவே அவர் பாவித்தவர்.

சேர நாட்டை ஆண்ட மாமன்னராக இருந்தாலும் அவர் ஸ்ரீ ராமபிரானின் மீது கொண்ட அன்பு அளவிட முடியாததாக இருந்தது. அப்படியாக ஒரு முறை ராமாயண சொற்பொழிவில் ராவணன் சீதையை தூக்கிச் சென்ற அத்தியாயத்தை படித்துக் கொண்டு இருந்தினர்.

இதைக் கேட்ட ஆழ்வார் மிகுந்த ஆவேசம் அடைந்து" ஐயோ! என்ன இது? என் ராமன் தனிய ஆளாக போரிடுகிறாரே" அவருக்கு துணையாக செல்ல யாருமே இல்லையா? இதோ இப்பொழுதே என்னுடைய சேனைகளுடன் நான் செல்கிறேன் என்று முழக்கமிட்டார்.

ஸ்ரீ ராமபிரானுக்காக போருக்கு சென்ற பேரரசர்.. நடந்த உண்மை சம்பவம் | Kulasekara Azhwar Sri Ramar Devotee Story

2026 ராமநவமி எப்பொழுது ? ஸ்ரீ ராமரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 6 குணங்கள்

2026 ராமநவமி எப்பொழுது ? ஸ்ரீ ராமரிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 6 குணங்கள்

உடனே தன் வாளை ஏந்தி குதிரைகள் மீதி ஏறி இலங்கையை நோக்கி போருக்கு புறப்படுகிறார். வழியில் குறுக்கிட்ட கடலை பார்த்தும் கூட அவர் அஞ்சவில்லை. என் ராமனுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் குதிரையுடன் கடலுக்குள் குதிக்கிறார்.

இதை பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ ராமபிரான் தன்னுடைய அடியவனின் தூய அன்பை கண்டு மனமகிழ்ந்து ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி அவர்கள் சீதாபிபிராட்டி உடன் அவர் கண் முன்னே தோன்றி நாங்கள் இருவரும் நலமாக திரும்பி வந்து விட்டோம் என்று கூறி அவரை சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வந்தார்கள்.

பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த ஒரு காவியத்திற்காக தன்னுடைய நாட்டையே மறந்து போருக்கு கிளம்பும் இத்தகைய பக்தி கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தனுக்கே மட்டுமே இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. மேலும், ஸ்ரீ ராமபிரான் மனதுக்குள் வந்துவிட்டால் எதையும் செய்யக்கூடிய வலிமையை அவர் கொடுத்து விடுகிறார்.

ஜெய் ஸ்ரீ ராம்.

 ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US