பிப்ரவரி லட்சுமி நாராயண ராஜயோகம் - 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்
பிப்ரவரி 3 ஆம் தேதி புதன் கிரகம் சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். அதே நாளில் சுக்கிரனும் கும்ப ராசியிலும் இணைவார். இதனால் சக்தி வாய்ந்த லட்சுமி நாராயண யோகம் உருவாகும்.

மேஷம்
11ஆம் வீட்டில் புதன் சுக்கிரன் சேர்க்கை நிகழ்கிறது. இந்த ஸ்தானத்தில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் வருமானத்திற்கு புதிய வழிகளை திறக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்பக் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை கூடும்.
ரிஷபம்
ராசியின் 10ஆம் வீட்டில், அதாவது தொழில் ஸ்தானத்தில் உருவாகிறது. எனவே இந்த காலக்கட்டத்தில் உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.
மிதுனம்
அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் விரைவில் முடிவடையும். மாணவர்கள் கல்வியில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள்.
துலாம்
கலை, எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். காதல் உறவுகள் இனிமையாக மாறும். பொருளாதாரம் வலுப்பெறும்.
கும்பம்
ஆளுமையை நேரடியாக பாதிக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமணமானவர்களின் உறவு இனிமையாக இருக்கும். தம்பதிகளிடையே புரிதல் மேம்படும்.