ஆசியாவின் மிகப்பெரிய தெப்பக்குளம்... தமிழ்நாட்டில் எங்கிருக்கிறது?
ஆசியாவின் மிகப்பெரிய தெப்பக்குளம் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது என்பதை விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஹரித்ரா நதி
இந்திய மாநிலமான தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மன்னார்குடீ நகர் ஆன்மீக மையங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது.
இங்கு ராஜகோபாலசாமி கோவில் மற்றும் அதனுடன் தொடர்பு கொண்ட ஹரித்ரா நதி தெப்பக்குளம் திகழ்கின்றது. இந்த தெப்பக்குளம் சுற்றுலாப் பயணிகளையும், பக்தர்களையும் கவர்ந்த முக்கிய தலமாக இருக்கின்றது.

பழங்காலத்தில் இப்பகுதியானது செண்பக மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றது. குறித்த நிலைத்தினை சீர் செய்து குடியிருப்பு பகுதியாக மாற்றி மன்னார்குடி செண்பகாரண்யம் என்று பெயர் பெற்றது.
மன்னார்குடியின் தனிச்சிறப்பாக நீர்நிலைகள் குறிப்பிடப்படுகின்றது. ஒரு காலத்தில் இந்நகரத்தில் 98 குளங்கள் இருந்ததாகவும், இதனால் கோவில் பாதி, குளம் பாதி என்ற பழமொழி கூறப்பட்டதாகவும், இந்த குளங்களில் மிக முக்கியம் வாய்ந்ததாக ஹரித்ரா நதி தெப்பக்குளம் உள்ளதாம்.

எவ்வாறு பெயர் வந்தது?
புராண கதையின் படி, கோபிலர் மற்றும் கோப்பிரளயர் முனிவர்கள் கிருஷ்ண அவதாரத்தினை தரிசிக்க விரும்பினர். இவர்களின் வேண்டுகோளுக்கு, ராஜகோபாலன் கோபிகைகளுடன் நீராட காவிரி நீரை இங்கு பெரும் குளமாக மாற்றியுள்ளதாகவும், அப்பொழுது கோபிகைகள்(பெண்கள்) பூசியிருந்த மஞ்சள் நீரில் கலந்துவிட்டதால் இக்குளம் ஹரித்ராநதி என்று பெயர் பெற்றதாக கூறப்படுகின்றது.

ஆசியாவின் மிகப்பெரிய தெப்பக்குளமாக இருக்கும் இந்த நதி சுார் 1,158 அடி நீளமும், 847 அடி அகலமும் மற்றும் 23 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். கடலைப் போன்று பரந்த நீர்ப்பரப்புடன் காணப்படுகின்றது.
பக்தர்கள், சுற்றுலாபயணிகள் அதிகமாக விரும்பும் இந்த நதியானது, காவிரியின் புனிதத் தீர்த்தங்கள் இதில் இணைந்துள்ளதாகவும், அமாவாசை, பௌர்ணமி, ரோகினி, திருவோணம் போன்ற நாட்களில் இங்கு நீராடுவது புண்ணியம் என நம்புகின்றனர்.
ஆக மொத்தம் மன்னார்குடியின் ஆன்மீக அடையாளமாக இந்த ஹரித்ராநதி காணப்படுகின்றது.

| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |