ஜோதிடம்: காலம் காலமாக சிம்ம ராசியை பற்றி பரவி வரும் 4 தவறான கட்டுக்கதைகள்
ஜோதிடத்தில் மிகவும் ஆளுமை திறனைக் கொண்ட சிம்ம ராசி 12 ராசிகளில் 5வது ராசி ஆகும். இவர்களுக்கு இயற்கையாகவே தலைமைத்துவ பண்புகள் நிறைந்து இருக்கும்.
இருந்தாலும், சிம்ம ராசியை பற்றிய தவறான கட்டுக்கதைகள் காலம் காலமாக இருந்து வருவதை நாம் பார்க்கமுடியும். அப்படியாக, உண்மையில் சிம்ம ராசிகள் எப்படி பட்டவர்கள் என்றுப் பார்ப்போம்.
1. சிம்ம ராசியினர் எப்பொழுதும் பிறருடைய கவனத்தை தன் வசம் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் என்ற கருத்துக்கள் உண்டு. ஆனால், உண்மையில் இவர்களுக்கு தனிமை அதிகம் பிடித்தமானது. இவர்களுக்கு அவர்களுடனே அதிக நேரம் செலவு செய்யவேண்டும் என்ற விருப்பமே இருக்கும்.
2. பலரும் சிம்ம ராசியினர் வாழ்க்கையில் சரியான முடிவுகள் எடுப்பதில் அதிக தடுமாற்றம் கொள்வார்கள் என்று சொல்லுவதுண்டு. ஆனால், சிம்ம ராசியை பொறுத்த வரையில் அவர்களுக்கு தான் என்ன செய்கின்றோம் என்பது நன்கு தெரியும். அவர்கள் ஒரு பொழுதும் பாதை மாறி செல்வதில்லை.
3. சிம்ம ராசி என்றால் முதலில் எல்லோரும் அவர்கள் மிகுந்த சுயநலவாதிகள் என்று எண்ணுவார்கள். ஆனால், அவர்களை போல் உதவும் குணமும் பரந்த உள்ளமும் யாரிடமும் நாம் பார்க்கமுடியாது.
4. சிம்ம ராசியினர் எப்பொழுதும் பிறரது பாராட்டுகளையும், கருத்துக்களையும் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் என்று பிறர் நினைப்பது உண்டு. உண்மையில் அவர்கள் யாருடைய பாராட்டுகளையும், விமர்சனங்களையும் எதிர்பார்ப்பது இல்லை. காரணம், சிம்ம ராசியினர் அவர்களை முழுமையாக நம்பக்கூடிய தன்மை கொண்டவர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |