2026: துலாம் ராசிக்கு நவம்பர் மாதம் இந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டுமாம்

By Sakthi Raj Oct 21, 2026 07:51 AM GMT
Report

ஜோதிட ரீதியாக சுக்கிர பகவானின் ஆதிக்கத்தை கொண்ட துலாம் ராசியினர் நீதி நேர்மை, நியாயம் சமநிலையாக யோசிக்க கூடியவர்கள். அந்த வகையில், அவர்களுக்கு நவம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது என்று பார்ப்போம்.

துலாம் ராசியினருக்கு நவம்பர் மாதம் சுக்கிரன் மற்றும் புதன் பகவானுடைய சேர்க்கையால் திடீர் அதிர்ஷ்டம் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டாகப் போகிறது.

இருப்பினும் இவர்கள் நண்பர் அல்லது தெரிந்தவர்கள் வழியாக பண இழப்புகள் அல்லது ஏமாற்றம் சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

அனைவரும் வள்ளலாரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்ன

அனைவரும் வள்ளலாரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்ன

இவர்களுக்கு குரு மற்றும் செவ்வாய் கிரகங்கள் உடைய நிலையால் தொழில் ரீதியாக நஷ்டம், கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு கருத்து வேறுபாடு கல்லீரல் தொடர்பான ஆரோக்கிய பாதிப்புகள் வரலாம். இந்த காலகட்டங்களில் முடிந்தவரை யாருக்கும் நீங்கள் கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

சட்ட போராட்டங்கள் அல்லது அரசியல் முயற்சிகளை தற்போது தள்ளி வைப்பது நல்லது. உங்களுடைய பேச்சுக்களில் மிகுந்த நிதானம் தேவை.

இந்த காலகட்டங்களில் முருகப்பெருமான வழிபாடு செய்வது சூரிய பகவானுக்குரிய ஆதித்ய ஹிருதயம் பாராயணம் செய்வது மற்றும் கோர்ட் கேஸ் பிரச்சினைகளில் இருந்து விடுபட வாராகியை வணங்குவது சிறப்பான பலன்களை பெற்றுக் கொடுக்கும்.

மேலும், துலாம் ராசிக்கு இந்த காலகட்டம் எப்படி இருக்க போகிறது என்று இந்த காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.    


ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US