சிவபெருமான் வரலாறும் வழிபாடும்

By பிரபா எஸ். ராஜேஷ் Sep 03, 2024 05:30 AM GMT
Report

சிவலிங்கம், சிவபெருமான் ஆகியவற்றைப் பல துறை சார்ந்த விளக்கங்களால் அறிந்துகொள்ளலாம். அறிவியல் இயற்கையின் இயல்பை அதன் இயக்கத்தைப் பொருள் (mass) என்றும் ஆற்றல் (energy) என்றும் இரண்டாகக் காண்கிறது.

பொருள் என்பது ஸ்தூல வபிவம் கொண்டது. அது பருப் பொருள். ஆற்றல் என்பதைக் கையால் தொட்டு பார்க்க இயலாது. அதனை அசைவால், வெப்பத்தால், ஒளியால் இன்னும் பல வகைகளால் உணர முடியும். ஆன்மீகம் இக்கருத்தை லிங்கம் என்றும் ஆவுடை என்றும் தெரிவிக்கின்றது. லிங்கம் என்பது பொருள்/ சிவம். அதண் இயக்கம் /ஆற்றல் சக்தி எனப்படும்.

அருள் சிவம் என்றால் அந்த அருளை இறைவனிடம் இருந்து மற்ற உயிர்களுக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல் சக்தியாகும். சிலர் சிவலிங்கத்தை ஆண்குறி வழிபாடு என்றும் சொல்வர். வேறு சிலர் இறைவனின் அரு உரு தோற்றம் என்றும் விளக்குவர். இரண்டையும் அறிந்துகொள்வோம். 

சிவபெருமான் வரலாறும் வழிபாடும் | Lord Shivan

சிவலிங்க பாகங்கள்

ஆன்மீகவாதிகள் சிவலிங்க பானத்தை மூன்று பாலாகப் பிரித்துக் காண்கின்றனர். அடிப்பகுதி பிரம்ம பாகம் எனும் அலி பாகமாகும். நடுப்பகுதி ஸ்ரீ பாகம் எனும் விஷ்ணு பாகமாகும். மேலே உள்ள நுனிப்பகுதி ருத்ர பாகம் எனும் சிவபாகம் ஆகும்.

சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயசுவாமியை இவ்வாறு மூன்று பாலாக விளக்குவர். சிவபெருமானை லிங்க வடிவத்தில் பெரும்பாலான கோயில்களில் வணங்குகின்றனர். விதி விலக்காக மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் சிவனும் பார்வதியும் புடைப்புச் சிற்ப வடிவில் காட்சியளிக்கின்றனர். 

சகள நிஷ்கள வடிவம்

லிங்கம் என்பது இறைவன் உருவாகவும் அருவுருவாகவும் இருக்கின்ற நிலையாகும். முகம் கை கால் போன்று உறுப்புகள் தனித்தனியாகத் தெரியாததனால் லிங்கத்தை உருவமற்றது என்கிறோம். ஆனாலும் ஒரு உருவம் இருப்பதினால் உரு என்றும் அழைக்கின்றோம் இதனை சகள நிஷ்கள வடிவம் என்பர்.

சிவபெருமான் வரலாறும் வழிபாடும் | Lord Shivan

ஐந்தொழில்கள்

இறைவன் பஞ்ச கிருத்தியங்களைப் புரியவே லிங்க வடிவெடுத்தான் என்பது ஐதீகம். பஞ்சகிருத்தியம் என்பது இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் ஆகும். ஆக்கல் அளித்தல் காத்தல் அருளல் மறைதல் என்ற ஐந்து பணிகளையும் இறைவன் செய்கின்றான். இந்த ஐந்து பணிகளையும் குறிக்கும் விதத்தில் நடராஜரின் தோற்றம் அமைந்துள்ளது.

ஜ்வாலா ரூபன்/ஒளியுரு

சிவபுராணத்தில் பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் தன் உருவத்தை ஆதி அந்தம் இல்லாத அனல் தூணாக ஜுவாலா லிங்க ரூபமாக இறைவன் காட்சி அளிக்கின்றார். சிவன் சன்னதியின் மேற்கு புற கோஷ்டத்தில் சிவனின் அடிமுடி தேடிய கதையை சித்திரிக்கும் இச்சிற்பத்தைக் காணலாம்.  

லிங்கம் தானது யாரும் அறியார்/

லிங்கம் தானது எண் திசை எல்லாம்/

லிங்கம் தானது எண்எண் கலையும்/

லிங்கம் தானது எடுத்தது உலகே/ என்ற சித்தர் பாடலில் சிவலிங்க ரூபத்தில் சிவபெருமான் எட்டுத் திசைகளிலும் தன் அதிகாரத்தை நிறுவியுள்ளார்.

சிவலிங்க ரூபமாக அவர் எட்டு ×எட்டு 64 கலைகளின் வடிவாகவும் விளங்குகின்றார். சிவலிங்கமே உலகமாக விளங்குகின்றது என்று அனைத்தும் சிவலிங்க சொரூபம் என்கிறார். 

சிவபெருமான் வரலாறும் வழிபாடும் | Lord Shivan

வேர்களைத் தேடி

சிவலிங்க வடிவத்தை எவ்வாறு மனிதர்கள் வழிபாட்டுக்குத் தேர்ந்தெடுத்தனர் என்ற அதன் வரலாற்றைத் தேடி அறியலாம். இன்றைக்கு மெய்யியல் ரீதியாகத் தத்துவார்த்தமாக சிவலிங்கத்திற்கு பல விளக்கங்கள் கொடுத்தாலும் சிவலிங்கத்தை வழிபடு பொருளாக ஏற்றுக் கொண்ட காலத்தில் வாழ்ந்த ஆதி கால மனிதர்கள் இத்தகைய தத்துவங்களை அறியவில்லை.

வாழ்க்கையில் ஒரு முறையாவது கட்டாயம் தரிசிக்க வேண்டிய திருச்சி கோயில்கள்

வாழ்க்கையில் ஒரு முறையாவது கட்டாயம் தரிசிக்க வேண்டிய திருச்சி கோயில்கள்


பெண் தெய்வ வழிபாடு மனித குல வரலாற்றின் முதல் உருவ வழிபாடாகும். அதன் பிறகு நில உடமைத்துவம் தோன்றிய காலத்தில் ஆண் ஆதிக்கமும் தோன்றி பெண் தெய்வ வழிபாட்டின் செல்வாக்கைக் குறைத்தது. 

உலகெங்கும் ஆண் தெய்வ வழிபாடு என்பது ஆண் குறியை வழிபடு பொருளாகக் கொண்டது. இதனை நட்டு வைக்கப்பட்ட மரத்தூண்கள், கல் தூண்கள் (பிற்காலத்தில் ஸ்தூபிகள்) என்ற வடிவங்களில் வைத்து வழிபட்டனர்.இக் கோவில்களில் ஆண்களே பூசாரிகளாக இருந்தனர்.

வழக்கில் இருந்த சேயோன் வழிபாடு என்பது ஆண் குழந்தை வழிபாடு ஆகும். இவ் வழிபாடு தஸித் தெய்வத்துடன் இணைந்தது. ஆனால் லிங்க வழிபாடு என்பது ஆண் தலைமைத் தெய்வத் தனி வழிபாடு ஆகும். 

சிவபெருமான் வரலாறும் வழிபாடும் | Lord Shivan

சிந்துவெளியில் லிங்கமா?

1920 இல் ராய் பகதூர் தயா ராம் சாஹ்னி என்ற சிந்துவெளி அகழ்வாய்வாளர் மொகஞ்சதாரோ அகழ்வாய்வின்போது அருகில் ஹரப்பா நகரம் புதைந்திருப்பதைக் கண்டறிந்தார். அங்கு கந்து எனப்படும் மூன்று கல் தூண்கள் கிடைத்தன.

1940ல் எம் எஸ் வேட்ஸ் என்பவர் கண்டறிந்த இக்கல் தூண்கள் ஆஸ்திகர்களால் சிவலிங்கம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டன. லிங்க வழிபாட்டை கிரேக்கத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்கள் இந்திரன், அக்கினி போன்ற தெய்வங்களோடு இங்குக் கொண்டு வந்ததாக அறிஞர்கள் கருதுகின்றனர்.  

நடு கல் வழிபாடு

ஊர் நன்மைக்காக இறந்த ஆடவருக்கு நடுகல் நட்டு வழிபடும் மரபு ஆதி காலத்தில் இருந்தது. இவ்வழிபாடும் லிங்க வழிபாட்டுடன் இணைந்து (syncretise) சிவ வழிபாடாகப் பரிணமித்தது. எனவே நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் என்று சித்தர் பாடும் வரிகளில் இறைவனுக்கு உருவ வழிபாடு தேவையில்லை இறைவனை இதயத்தில் இருத்தி தியானிக்க வேண்டும் என்ற கருத்து தெளிவாகிறது.

உலகின் மிகப் பழைய லிங்கமாக குடிமல்லம் என்ற பகுதியில் கிடைத்திருக்கும் லிங்கம் கருதப்படுகின்றது. இதண் காலத்தை கிமு 3ஆம் நூற்றாண்டு முதல் 2ஆம் நூற்றாண்டு வரை கணிக்கின்றனர். இக்காலத்தில் தான் சங்க இலக்கியம் எழுதப்பட்டது. பௌத்த சமண சமயங்கள் தோன்றின.  

சிவபெருமான் வரலாறும் வழிபாடும் | Lord Shivan

(கந்து) இந்திர வழிபாடு

லிங்க வழிபாடு வேறு வேல் வழிபாடு வேறு. முருகனுக்குரிய வேல் என்பது வீரயுகத்தின் ஆயுத வடிவ வழிபாடு ஆகும். தமிழகத்தில் லிங்கபான வடிவத்தில் முதலில் வணங்கப்பட்ட தெய்வம் இந்திரன் ஆகும் 'கந்துடை பொதியில்' என்று இந்திரன் கோட்டத்தைச் (கோவிலை) சிலப்பதிகாரம் குறிக்கின்றது.

கல் தூண் (கந்து) வடிவில் வணங்கப்பட்டவன் இந்திரன். கந்து வடிவம் அவனுக்கு அமைந்தன் காரணம் அவன் தேவலோக மாதர்க்கு இந்திரிய தானம் செய்பவன். எனவே லிங்க (கந்து) உருவம் அவனுடைய பதிலி உருவமாக, அடையாளச் சின்னமாக விளங்கியது இந்திர வழிபாடு சமண பௌத்த சமயங்களில் செல்வாக்குப் பெற்றிருந்தது.

பின்னர் அச்சமயங்களின் செல்வாக்குக் குறைந்த காலத்தில் வைதீகச் சமயங்களின் பேரெழுச்சி தோன்றிய பிறகு இந்திரனுக்கு வைக்கப்பட்டிருந்த கந்து அனைத்தும் சிவலிங்கமாக பெயர் மாற்றம் பெற்றன.  

அறுவகைச் சமயங்கள் பிரிக்கப்பட்டு அவற்றில் சைவமும் வைணவமும் பெரு வளர்ச்சி பெற்ற காலத்தில் சிவலிங்கம் சிவனுக்கு உரியதாயிற்று. அதன் பிறகு இந்திரனை யாரும் வழிபடுவது கிடையாது. அவனை மோகி, போகி, ரோகி என்றும வெறுத்துவிட்டனர்.

சிவபெருமான் வரலாறும் வழிபாடும் | Lord Shivan

 ஆவுடை வழிபாடு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து பெண் தெய்வ வழிபாட்டின் சின்னமாக இருந்து வருகின்றது. பௌத்த சமண சமயங்கள் தமிழகத்திற்குள் வந்தபோது ஆவுடை வழிபாடு (யோனி வழிபாடு) காமாட்சி வழிபாடாக வளர்ச்சி பெற்றது.

காமாட்சி என்றால் காம + யட்சி காமத்திற்கு உரிய தேவதை. பௌத்தர்களின் கல்வித் தலைநகரமாக விளங்கிய காஞ்சிபுரத்தில் இருக்கும் காமாட்சி கோவிலில் காணப்படும் ஆவடை வடிவம் ஆதி காலப் பெண் தெய்வ வழிபாட்டின் அழியாத அடையாளச் சின்னமாகும்.

சிவபெருமான் வழிபாடு சிறப்புற்ற காலத்தில் ஆவுடைய வழிபாடு மட்டும் இருந்த கோயில்களில் சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிவனின் நாயகியாக அங்கிருந்த பெண் தெய்வம் ஏற்றுக் கொள்ளப்பட்டாள். அவர்களின் உறுப்புகளை குறிப்பனவாக இருந்தன. அவை பின்னர் வடமொழிப் பெயர்களாக மாற்றம் பெற்றன. (எடுத்துக்காட்டு அபித குஜாம்பாள், கிரி குஜாம்பாள் குஜா என்றால் மார்பு)

உலகெங்கும் லிங்கம் லிங்க வழிபாடு

இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் காணப்படுகின்றது. பூடான் நாட்டில் சுவர்களில் இக் குறியீட்டைப் பல்வேறு வகைகளில் வரைந்து வைக்கும் அளவிற்கு பரவலாக உள்ளது. வர்த்தக நிலையங்களின் வாசல்களில் கடைகளின் வாசலில் லிங்கக் குறியீடுகளைத் தொங்க விடுவது அதிர்ஷ்டம் இலாபம் என்று இங்கு வாழும் மக்கள் கருதுகின்றனர்.

எகிப்து நாட்டில் ஓசிரிஸ் என்ற பெயரில் வணங்கினர். ரோம் நாட்டில் லிங்க வடிவில் தாயத்துகள் செய்து அணிந்தனர். நம் தமிழகத்தில் குஞ்சுமணி என்ற பெயரில் வெள்ளியில் செய்து ஆண் குழந்தைகளுக்கு அரை ஞாண் கயிற்றில் கோர்த்து விடுவர்.

இதுவும் ஒரு தற்காப்பு கவசமே ஆகும். லிங்க வடிவ தாயத்துகள் மக்களைத் தீய சக்திகளிடம் இருந்து, ஏவல் பில்லி சூனியத்தில், கண் திருஷ்டியை இருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கை உலகெங்கும் நிலவுகிறது. இத்தாயத்துகள் அணிவோருக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் கொண்டு வரும் என்ற நம்பிக்கையும் உண்டு.

வட அமெரிக்காவில் கோகோ பெல்லி என்ற கடவுள் இந்தியாவின் சிவலிங்கத்திற்கு நிகரான கடவுளாகும். கிரீஸ் நாட்டில் பிரியபூஸ் என்ற கடவுள் சிவலிங்க வடிவில் வணங்கப்படுகிறது.

கிரேக்க நாட்டுப்புறங்களில் பான் என்ற கடவுள் லிங்க வடிவில் வணங்கப்படுகிறார். கொலம்பியாவில் சாக்கூன் என்ற பெயரில் லிங்க வடிவில் கடவுள் இருக்கிறார்.  

சிவபெருமான் வரலாறும் வழிபாடும் | Lord Shivan

வேதம் காட்டும் லிங்கம்

ரிக் வேதம் சிசுன தேவ் (7:21:3:5) என்ற கூட்டத்தினர் வேத நெறிக்கு எதிர்த்து செயல்பட்டனர் என்றும் இவர்களை இந்திரன் அழித்து ஒழிக்க வேண்டும் என்றும் சொல்கிறது. யாஸ்கர் என்பவர் இக் கூட்டத்தினர் ஆண்குறியை வழிபடுகின்றனர்.

இவர்கள் கற்பு நெறி இல்லாதவர்கள் என்கிறார். சாயனர் தனது விளக்க உரையில் சிசுன தேவ் கூட்டத்தினர் காம விளையாட்டுகளில் ஈடுபடுகின்றவர்கள் என்கிறார். துர்காச்சாரியார் இவர்கள் வேத அனுஷ்டானங்களை கைவிட்டு சதா விலை மாதர்களோடு பொழுதைப் போக்குகின்றனர் என்கிறார்.

சிவலிங்கம் என்பது சைவத்தின் தலைமைக் கடவுளாக வழிபடுவதற்கு முன்பே ஒரு கூட்டத்தினரால் வேத காலத்தில் இருந்தே வழிபடப்பட்டு வந்துள்ளது ரன்ப்தை அறிகின்றோம்.   

அதர்வண வேதம் சிவலிங்கத்தைப் பற்றி சிறப்பான பல விளக்கங்களைத் தருகின்றது. உலக உற்பத்திக்கு காரணமாய் இருந்த லிங்கத்தை வணங்க வேண்டும் என்று லிங்கத்தை உற்பத்தி காரணி என்று விளக்குகின்றது.

பவாய நமஹ பவலிங்காய நமஹ என்கிறது அதர்வண வேதம். பிரளய காலத்தில் அனைத்து உயிர்களும் லிங்கத்திடம் லயம் அடைந்து ஒதுங்கிவிடும். பின்பு யுகத்தின் தொடக்கத்தில் அனைத்து உயிர்களும் லிங்கத்திலிருந்து மீண்டும் தோன்றும் என்கிறது.  

ஆகம விளக்கம் அஜிதாகமம் என்ற ஆகமம் லிங்கத்தின் பீடமான ஆவுடை பிந்துவைக் குறிக்கும் என்றும் லிங்கம் நாதத்தை குறிக்கும் என்றும் விளக்குகிறது. நாதம் என்பது ஓசை, அந்த ஓசையை ஊரெங்கும் பரப்புவது ஆவுடையின் ஆற்றல் ஆகும். சிவனே என்று கிட என்றால் எந்த வேலையும் செய்யாமல் எதையும் சிந்திக்காமல் சும்மா இரு என்பது பொருள்.

பரபரப்பான கோயம்புத்தூரில் நாம் கவனிக்க தவறிய முக்கியமான கோயில்கள்

பரபரப்பான கோயம்புத்தூரில் நாம் கவனிக்க தவறிய முக்கியமான கோயில்கள்


ஆக இந்த சிவன் என்ற அசையாப் பொருளுக்கு அசையும், நகரும், செயல்படும் ஆற்றலைக் கொடுப்பது ஆவுடையின் பணி. இதை தான் சிவம் இல்லையேல் சக்தி இல்லை, ஸ்சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்கின்றனர். லிங்கத்திலிருந்து அனைத்து உயிர்களும் தோன்றி பின்பு லிங்கத்தால் சம்ஹரிக்கப்பட்டு / அழிக்கப்பட்டு அவை அனைத்தும் லிங்கத்துக்குள்ளையே ஒடுங்கி விடுகின்றன. எனவே ஆக்கல், காத்தல், அழித்தல், அருளல் ,மறைதல் என லிங்க வடிவான சிவபெருமான் ஐந்து தொழில்களை செய்வதாகக் கருதப்படுகிறது.  

சிவன் என்னும் தலைவன்

சமூகவியல் ஆராய்ச்சியாளர்கள் சிவன் என்னும் இனக்குழுத் தலைவன் இமயமலையிலிருந்து தென்பகுதி நோக்கித் தனது படையுடன் புறப்பட்டு வரும்போது வழி நெடுகிலும் யானை, மான், புலி, நாகம் போன்றவற்றைத் தமது குல மரபுச் சின்னமாகக் கொண்டவர்களைப் போரில் வென்று வெற்றி வாகை சூடினான். அவர்களின் சின்னங்களை தனதாக்கிக் கொண்டான். அதனால் அவன் கைகளில் மான் ஆயுதமாக உள்ளது. புலியைக் கொன்று உரித்து அரையாடையாக உடுத்தியுள்ளான்.

யானையைக் கொன்று அதன் தோலுரித்து மேலாடையாகப் போர்த்தியுள்ளான் என்கின்றனர். வரலாற்றுக்கு முந்திய காலத்தில் குல மரபுச் சின்னத்தை ஒருவன் கொன்று விட்டால் அவன் வெற்றி பெற்றதாகிவிடும். அப்போது அவன் அந்த சின்னத்தை தனதாக்கிக் கொள்வான்.

காசிக்கு போறீங்களா அப்போ கண்டிப்பாக இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

காசிக்கு போறீங்களா அப்போ கண்டிப்பாக இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

 

இவ்வாறு வெற்றி முரசு கொட்டி வந்த சிவன் மதுரைக்கு வந்து அங்குப் பெண்ணரசியாக இருந்த மீனாட்சியின் மீது போர் தொடுத்து அவளையும் வென்று அதுவரை தென்னாட்டில் இருந்த பெண்வழி ஆட்சியை ஒழித்து ஆண்வழி ஆட்சிமுறையை அறிமுகம் செய்தான்.

அங்கேயே செங்கோலேந்தி ஆட்சி நடத்தினான் என்பர். மதுரையில் கோயில் கொண்ட காஞ்சனமாலாவின் மகள் மீனாட்சியின் ஆட்சி மறைந்தது. சொக்கநாதர் என்ற சுந்தர பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். பின்பு அவன் மகன் உக்கிர பாண்டியன் ஆட்சிக்கு வந்தான் என்று திருவிளையாடல் புராணம் தென்னக வரலாற்றின் ஆட்சி மாற்றத்தை உறுதி செய்கிறது. 

உண்மையான ஆன்மிகம் என்றால் என்ன?

உண்மையான ஆன்மிகம் என்றால் என்ன?


ஆவணி மூலம் ஆட்சி மாற்றம்

மதுரையில் ஆவணி மாதத்தில் மூல நட்சத்திரத்தன்று சொக்கநாதர் கையில் செங்கோல் வழங்கப்படும் மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் திருமதி ருக்மணி பழனிவேல்ராஜன் அவர்கள் செங்கோலை வழங்குவார். அன்று முதல் சிவபெருமானின் ஆட்சி தொடங்கும்.

அன்று மதுரையின் ஆவணி மூல வீதிகளில் மன்னனாகப் பவனி வருவார். எல்லா நாட்டையும் இனத்தையும் வென்று மன்னனாக (இறைவனாக) வந்த சிவன் தென்னாட்டைத் தன்னுடையதாக்கி மதுரை நகரில் அமர்ந்துவிட்டான். இக்கருத்தை மாணிக்கவாசகர் தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! என்று பாடிப் போற்றினார்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.








+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US