இந்த 4 மாதத்தில் பிறந்தவர்களின் நட்பு கிடைத்தால் நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்களாம்
மனிதர்களுக்கு இக்கட்டான சூழ்நிலைகளில் உதவும் ஒரு அற்புதமான உறவாக நட்பு வட்டாரம் இருக்கிறது. ஒரு நல்ல நட்பு ஒரு மனிதனுக்கு அமைந்து விட்டால் அவன் மிகப் பெரிய சாதனையை செய்து விடலாம். இங்கு பலருக்கும் நல்ல நட்பு கிடைக்காமல் அவதிப்படுவதையும் பார்க்கலாம்.
அப்படியாக குறிப்பிட்ட இந்த நான்கு மாதத்தில் பிறந்தவர்களுடைய நட்பு கிடைத்தால் ஒருவர் மிக உயர்ந்த நிலைக்கு செல்லலாம் என்கிறார்கள். அதைப்பற்றி பார்ப்போம்.
ஏப்ரல்
ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் நேர்மறை சிந்தனை கொண்டவர்கள். இவர்கள் வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள். அதோடு இவர்களை நம்பி விட்டால் அந்த நம்பிக்கையை உடைக்காமல் அதை பாதுகாக்க நினைப்பவர். மேலும் நட்புக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். நண்பர்கள் சந்திக்கும் வெற்றியை தன்னுடைய வெற்றியை போல் கொண்டாடுபவர்கள்.
ஜூலை
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் உதவும் குணம் கொண்டவர்கள். இவர்கள் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பழகுவார்கள். நட்பு வட்டாரத்தில் நட்புக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் முன்வந்து உதவுவார்கள். இவர்களுடைய அன்பை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்ட மாட்டார்கள். மிகவும் விசுவாசமான குணம் படைத்தவர்கள்.
அக்டோபர்
இவர்களை சுற்றி ஒரு மிகப் பெரிய நட்பு வட்டாரம் இருக்கும். நட்புகளுடைய வெற்றியையும் நட்புகளுடைய நலனிலும் அதிக ஆர்வம் கொண்டு பார்ப்பவர்கள். நட்புகளுக்கு உண்மையாக இருந்து பழகக் கூடியவர்கள். நண்பர்கள் ஏதேனும் பிரச்சனையை சந்தித்தால் எவ்வளவு முயற்சி செய்தாவது அதை முடித்து வைப்பார்கள. நண்பர்களிடையே இவர்களுக்கு நல்ல பெயர் இருக்கும்.
நவம்பர்
நவம்பர் மாதத்தில் பிறந்தவர்களுடைய நட்பு கிடைத்தால் மிகவும் அதிர்ஷ்டம். இவர்கள் நட்பை மிகவும் நேசிக்கக் கூடியவர்கள். நட்புக்காக எதையும் செய்ய துணி பவர்கள். தன் நண்பர்களுடைய நலனிலும் கஷ்டங்களிலும் பங்கு கொண்டு அவர்களுக்கு துணையாக நிற்க கூடியவர்கள். அவ்வளவு எளிதாக நட்பை தூக்கி எறிய மாட்டார்கள். நண்பர்கள் இவர்களிடம் பேச மறந்தாலும் இவர்கள் அவர்களிடம் பேசுவதை நிறுத்த மாட்டார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







