இந்த இடத்தில் மச்சம் இருந்தால் உங்களிடம் பணம் நிரம்பி வழியுமாம்!
உடலில் மச்சம் இருப்பது என்பது அனைவருக்கும் இருக்கும் ஒரு பொதுவான விடயமாகும்.
மச்ச சாஸ்திர விதிப்படி, ஒருவருக்கு எந்த இடத்தில மச்சம் இருக்கிறதோ அதற்கு ஏற்ற சுப பலன்கள், அசுப பலன்கள் உள்ளது.
அந்தவகையில், வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கருதப்படுகிறது. இவர் 35 வயதிற்கு ஆடம்பர வாழ்க்கையை பெறுவதாக கருதப்படுகிறது.
அடுத்து உள்ளங்கையின் நடுவில் மச்சம் உள்ளவர்கள் வாழ்க்கையில் நிச்சயம் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள்.
இதைபோல், உள்ளங்கையின் ஓரத்தில் மச்சம் உள்ளவர்கள் வாழ்க்கையில் நிறைய சம்பாதிப்பார்கள், இவர்களின் கைகளில் எப்போதும் பணம் நிறைந்திருக்கும்.
மூக்கில் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டத்தை குறிக்கிறது. இவர்கள் ஆடம்பரங்களை எளிதில் பெறுவார்கள். மேலும், வாழ்க்கையில் மிகவும் பணக்காரர்களாக திகழ்வார்கள்.
குறிப்பாக பெண்களின் இடுப்பில் இடது புறம் மச்சம் இருந்தால் அவர்களின் வீட்டின் நிதி நிலை எப்பொழுதும் சீராக இருக்கும். மேலும் அவர்களின் ஆளுமை கவர்ச்சிகரமானதாக இருக்கும்.
வலது இடுப்பில் மச்சம் உள்ளவர்கள் அதிர்ஷ்டசாலியாக கருதப்படுகிறார்கள்.
கட்டை விரலில் மச்சம் இருப்பது அவர்கள் அதிர்ஷ்டசாலி என்பதை குறிக்கும். இவர்களின் வெற்றிக்கு எந்த தடையுமின்றி அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும்.
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, புருவ மத்தியில் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் மகத்தான வெற்றி பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |